விசா கிடைக்காததால் அணியுடன் இணைய முடியாமல் தவிக்கும் சி.எஸ்.கே வீரர் – பரிதாப நிலை

CSK-2
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 15-வது சீசனானது அடுத்த வாரம் மார்ச் 26-ஆம் தேதி துவங்கவுள்ளது. ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் ரசித்து பார்க்கப்படும் ஐபிஎல் தொடரானது இன்னும் ஒருசில நாட்களில் துவங்க இருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது. அதுமட்டுமின்றி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சீசனும் இந்தியாவில் நடைபெற இருப்பது கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது. அந்தவகையில் எதிர்வரும் சீசனுக்கான பயிற்சியில் அனைத்து அணிகளும் தற்போது மும்முரம் காட்டி வருகின்றன.

CSk

- Advertisement -

மற்ற அணிகளை விட சிஎஸ்கே அணி முன்னதாக சூரத் நகருக்கு சென்று அங்கு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. நடப்பு சாம்பியனான சிஎஸ்கே இந்த ஆண்டும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை தக்க வைக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் இருந்து வருகிறது. ஆனாலும் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ள ஒரு சில வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டு வருவது சி.எஸ்.கே அணிக்கு பின்னடைவை தந்துள்ளது.

குறிப்பாக ருதுராஜ் கெய்க்வாட், வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் ஆகியோர் காயமடைந்துள்ளதால் அவர்களின் நிலை குறித்த தெளிவான ஒரு தகவல் இல்லை. அதனை தொடர்ந்து தற்போது இன்னொரு வெளிநாட்டு வீரர் இன்னும் சிஎஸ்கே அணியின் பயிற்சி இணையவில்லை என்பது கூடுதல் வருத்தத்தை அளித்துள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்காக ஒரு ஆல்-ரவுண்டராக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து வீரர் மொயின் அலி இதுவரை இந்தியா வந்து சிஎஸ்கே அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடாதது சிஎஸ்கே அணிக்கு ஏற்பட்ட பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

மொயின் அலி காயம் காரணமாக அல்லது கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாகவோ இங்கு வரவில்லை என்று நினைக்க வேண்டாம். அதற்கான சரியான காரணத்தை தற்போது சிஎஸ்கே அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி இங்கிலாந்தில் இருக்கும் மொயின் அலி இந்தியா வருவதற்கு மத்திய அரசு விசா அனுமதி வழங்கவில்லை. அதற்கான காரணம் என்ன என்பதும் எங்களுக்கு இதுவரை தெரியவில்லை.

- Advertisement -

இருந்தாலும் இந்த பிரச்சனை முடிந்து இன்னும் ஒரு சில நாட்களில் மொயின் அலி இந்தியா பறந்து வந்து விடுவார் என்று கூறியுள்ளது. மேலும் விசா சிக்கல் குறித்து மொயின் அலியுடன் நாங்கள் பேசி உள்ளோம். அவர் அவரது தரப்பில் இருந்து தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து விட்டதாகவும் இருப்பினும் இந்தியா விசா கிடைக்க தாமதமாகி வருவதால் எப்போது அனுமதி கிடைத்தாலும் உடனடியாக வந்து சேர்வதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ரெய்னாவை யாரும் ஏலத்தில் எடுக்காததுக்கு இதுவே காரணம் – தெளிவான விளக்கத்தை கொடுத்த சங்கக்காரா

சூரத் நகரில் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வரும் சிஎஸ்கே அணியில் இதுவரை மொயின் அலி இணையாததால் அவர் இந்தியா வந்ததும் கட்டாயம் மூன்று நாட்கள் ககுவாரன்டைனில் இருந்தாக வேண்டும். இதன் காரணமாக துவக்கத்தில் மொயின் அலி ஒரு சில போட்டிகளை தவற விடவும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement