எனக்கு 35 வயசாயிடுச்சி. இனிமே டெஸ்ட் போட்டிக்கு நோ சொன்ன – சி.எஸ்.கே அணியின் சர்வதேச வீரர்

moeen-ali-1
- Advertisement -

பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது அங்கு 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடியது. இந்த தொடரை நான்குக்கு மூன்று (4-3) என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அடுத்ததாக டி20 உலக கோப்பை தொடர் முடிந்த பின்னர் மீண்டும் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.

EngvsPak

- Advertisement -

ஏற்கனவே டி20 அணிக்கு கேப்டனாக இருக்கும் பட்லர் காயம் காரணமாக இந்த தொடரில் இடம் பெறவில்லை என்பதால் அவருக்கு பதிலாக தற்காலிக கேப்டனாக செயல்பட்ட நட்சத்திர ஆல்ரவுண்டர் மொயின் அலி மிகச் சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்து அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளார். அதே வேளையில் இந்த டி20 உலக கோப்பைக்கு பிறகு நடைபெற உள்ள டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவர் பங்கேற்று விளையாடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் இனிமேல் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாட முடியாது என்றும் ஓய்வு அறிவிக்க உள்ளேன் என்றும் தற்போது மொயின் அலி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : ஏற்கனவே நான் பயிற்சியாளரிடம் பேசி விட்டேன். என்னால் இனி மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட முடியாது. ஏனெனில் எனக்கு தற்போது 35 வயதாகி விட்டது. அதனால் நான் எதையாவது ஒன்றை இழந்து தான் ஆக வேண்டும்.

Moeen

அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும் என்றாலும் என்னுடைய குடும்பத்துடன் நேரத்தில் செலவிட வேண்டும் என்பதற்காக டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெற திட்டமிட்டுள்ளேன். என்னிடம் பயிற்சியாளர் மெக்கல்லம் நீண்ட நேரம் பேசிவிட்டார். ஆனாலும் நான் அவரிடம் மன்னிப்பு கேட்டு அந்த வாய்ப்பை மறுத்து விட்டேன்.

- Advertisement -

எனவே இனிமேல் நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட போவதில்லை என்று மொயின் அலி உறுதியாக தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக கடந்த 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 64 போட்டியில் விளையாடி 2914 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஐசிசி டி20 உலககோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த டாப் 7 பேட்ஸ்மேன்களின் பட்டியல்

ஏற்கனவே இதே போன்று கடந்த 2021-ஆம் ஆண்டு இனிமேல் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட முடியாது என்று கூறிய மொயின் அலி மீண்டும் ஓய்வு முடிவை வாபஸ் பெற்று டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாடினார். ஆனால் இம்முறை தனது முடிவில் உறுதியாக உள்ளதால் அவர் இனிமேல் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட மாட்டார் என்பது உறுதி.

Advertisement