பாகிஸ்தானுக்கு ட்விஸ்ட் கொடுக்க நட்சத்திர வீரரை களமிறக்கும் இங்கிலாந்து – சூப்பர் ப்ளான் தான்

- Advertisement -

சமீப காலங்களில் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்த இங்கிலாந்து தற்போது புதிய எழுச்சியை நோக்கி பயணிக்கத் துவங்கியுள்ளது. கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஆஷஸ் தொடர் உட்பட கடந்த 2 வருடங்களில் சொந்த மண்ணில் கூட படுதோல்வியடைந்த அந்த அணிக்கு அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன் என்று சாதனை படைத்த போதிலும் தொடர் தோல்விகள் காரணமாக ஜோ ரூட் பதவி விலகினார். அதை தொடர்ந்து புதிய கேப்டனாக அந்த அணியை சேர்ந்த உலகின் நம்பர் ஒன் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டார். அவருடன் நியூசிலாந்தின் ஜாம்பவனாக கருதப்படும் பிரண்டன் மெக்கலம் தலைமை பயிற்சியாளராக நியமிக்க பட்டார்.

ENg vs NZ Kane Williamson Ben Stokes

- Advertisement -

அந்த நிலைமையில் உலகின் முதல் டெஸ்ட் சாம்பியனான நியூசிலாந்துக்கு எதிராக தற்போது சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து 1 – 0* என்ற கணக்கில் முன்னிலை பெற்று பென் ஸ்டோக்ஸ் தலைமையில் தனது பயணத்தை வெற்றியுடன் துவக்கியது. அத்துடன் டிரென்ட் பிரிட்ஜ் நகரில் நடைபெற்று வரும் 2-வது போட்டியிலும் அந்த அணி வெற்றியை நோக்கி நடந்து வருகிறது.

மெக்கல்லம் அதிரடி:
அந்த அணியின் இந்த வெற்றிப் பயணத்திற்கு புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள பிரெண்டன் மெக்கல்லம் முக்கிய பங்காற்றி வருகிறார். முதலில் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நல்ல பார்மில் இருந்த போதிலும் காரணமின்றி கழற்றிவிடப்பட்ட ஜேம்ஸ் ஆண்டர்சன் – ஸ்டூவர்ட் பிராட் ஆகிய சீனியர் நட்சத்திர வேகப்பந்து வீச்சு கூட்டணியை அவர் மீண்டும் அணிக்குள் கொண்டு வந்துள்ளார். அடுத்ததாக சுழல் பந்துவீச்சு துறையை பலப்படுத்தும் வகையில் இங்கிலாந்துக்காக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அற்புதமாக செயல்பட்டு வரும் மற்றொரு வீரர் மொய்ன் அலியை டெஸ்ட் அணிக்குள் மீண்டும் கொண்டு வருவதற்கு கடுமையான முயற்சி எடுத்து வருகிறார்.

Mccullum 1

கடந்த 2014இல் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான மொயின் அலி 64 போட்டிகளில் 2914 ரன்களையும் 195 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். கடைசியாக கடந்த 2021இல் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் களமிறங்கிய அவர் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு சிறப்பாக செயல்படத் தவறியதால் கழற்றி விடப்பட்டார். இருப்பினும் ஐபிஎல் உட்பட வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அட்டகாசமாக செயல்பட்டு வரும் தற்போது நல்ல பார்மில் உள்ளார்.

- Advertisement -

மீண்டும் மொய்ன்:
அதனால் அவரை எப்படியாவது மீண்டும் டெஸ்ட் அணியில் சேர்ப்பதற்கு பிரண்டன் மெக்கலம் நேரடியாகவே அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அதற்கு தாமும் சம்மதம் தெரிவித்துள்ளதால் விரைவில் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு திரும்ப உள்ளதாக மொயின் அலி உறுதிப்படுத்தியுள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவர் (மெக்கல்லம்) என்னை விளையாடுவதற்கு விரும்பினால் நான் பாகிஸ்தானில் விளையாட தயார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடியுள்ளேன். அங்கு இங்கிலாந்துக்காக விளையாடுவது மட்டுமல்லாமல் என்னுடைய குடும்ப வரலாறும் உள்ளது சிறப்பானது. எனவே கிரிக்கெட்டை விரும்பும் அங்குள்ள ரசிகர்களிடம் எனக்கு ஆதரவு கிடைக்கும் என்று எனக்கு தெரியும்”

Moeen-Ali

“அவரை (மெக்கல்லம்) போன்ற ஒருவரிடம் முடியாது என்று சொல்ல எனக்கு கடினமாக உள்ளது. அந்த அளவுக்கு அவர் சுமூகமாக பேசினார். சொல்லப்போனால் அவர் தலைமையிலும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலும் விளையாட விரும்புகிறேன். நல்ல குணங்களை கொண்டுள்ள அவர்கள் ஆக்ரோசம் நிறைந்தவர்கள். எனவே அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப நானும் பொருந்துவேன் என்று உணர்கிறேன்” என்று கூறினார்.

- Advertisement -

மாஸ்டர் ப்ளான்:
அதாவது மெக்கல்லம் கேட்டுக்கொண்டதால் இங்கிலாந்துக்காக மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளதாக கூறும் மொயின் அலி பாகிஸ்தான் தொடர் வரும்போது நிச்சயம் திரும்புவேன் என்று கூறியுள்ளார். இருப்பினும் இதன் பின்னணியில் மிகப்பெரிய மாஸ்டர் பிளான் உள்ளது என்றும் கூறலாம். ஏனெனில் பாகிஸ்தான் மண்ணில் கடந்த 17 வருடங்களாக இங்கிலாந்து எந்த விதமான கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்கவில்லை. அந்த நிலைமையில் வரும் டிசம்பரில் டி20 மற்றும் டெஸ்ட் தொடருக்காக இங்கிலாந்து அங்கு 17 வருடங்கள் கழித்து செல்கிறது.

இதையும் படிங்க : IND vs RSA : 2 ஆவது போட்டியில் டி காக் விளையாடாததற்கு காரணம் என்ன தெரியுமா? – விவரம் இதோ

எனவே பிறப்பிடமாக பாகிஸ்தானை கொண்டுள்ள மொயின் அலி அங்கு பாகிஸ்தானுக்கு எதிராக கடும் சவாலை கொடுப்பார் என்பதால் அந்த சுற்றுப்பயணத்தின் போது இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு திரும்புமாறு மெக்கல்லம் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் ஏற்கனவே பிஎஸ்எல் தொடரில் விளையாடி அனுபவமுள்ள தமக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்பதால் அந்த தொடரில் கம் பேக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்று மொயீன் அலியும் தனது விருப்பத்தை தெரிவிக்கிறார்.

Advertisement