IND vs RSA : 2 ஆவது போட்டியில் டி காக் விளையாடாததற்கு காரணம் என்ன தெரியுமா? – விவரம் இதோ

dekock
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி கட்டாக் மைதானத்தில் நடைபெற்றது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா அணியானது இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

miller

இந்நிலையில் கட்டாக் மைதானத்தில் நடைபெற்று முடிந்த இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 148 ரன்களை குவிக்க 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு தென் ஆப்பிரிக்க அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

அதன்படி இந்த போட்டியிலும் அபாரமாக சேஸிங் செய்து விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணியானது 18.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

Dekock

இந்நிலையில் இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக தென் ஆப்பிரிக்க அணியின் துவக்க வீரர் குவிண்டன் டிகாக் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கிளாசன் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். அதேபோன்று கடந்த போட்டியில் விளையாடிய ஸ்டப்ஸ்க்கு பதிலாக ரீசா ஹென்ரிக்ஸ் அணியில் இணைந்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் டிகாக் விளையாடாதது ஏன் என்று ரசிகர்கள் மத்தியில் பெரிய கேள்வி எழுந்துள்ளது. அதற்கான காரணத்தை தான் இங்கே நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி முதல் போட்டியில் விளையாடிய டி காக் இரண்டாவது போட்டிக்கு முன்னதாக கட்டாக் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டபோது அவரது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டதாகவும் அதன் காரணமாகவே அவர் இந்த போட்டியில் விளையாட முடியாமல் போனது.

இதையும் படிங்க : ஐபிஎல் ஒளிபரப்பு ஏலம் – முதல் நாளிலேயே ரசிகர்கள் வாய் மேல் கைவைக்கும் கோடிகளுடன் கடும் போட்டி – முழுவிவரம்

அவருக்கு பதிலாக இந்த இரண்டாவது போட்டியில் விளையாடிய கிளாசன் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 46 பந்துகளில் 81 ரன்கள் குவித்து இந்திய அணியை தனி ஒருவனாக வீழ்த்தினார் என்றே கூறலாம். மேலும் அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement