ஐபிஎல் ஒளிபரப்பு ஏலம் – முதல் நாளிலேயே ரசிகர்கள் வாய் மேல் கைவைக்கும் கோடிகளுடன் கடும் போட்டி – முழுவிவரம்

IPL-bcci
Advertisement

உலகின் நம்பர் ஒன் பிரீமியர் லீக் டி20 தொடராக உருவெடுத்துள்ள ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கி மே 29-ஆம் தேதி வரை 65 நாட்கள் ரசிகர்களை மகிழ்வித்து நிறைவு பெற்றது. இந்த வருடம் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய புதிய அணிகளின் சேர்த்து 10 அணிகள் விளையாடியதால் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் ரசிகர்களுக்கு நிறைய திரில்லான போட்டிகளை விருந்தாகப் படைத்தது.

அதில் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ஹர்திக் பாண்டியா தலைமையில் முதல் வருடத்திலேயே லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் சொல்லி அடித்த குஜராத் டைட்டன்ஸ் இறுதிப்போட்டியில் அதுவும் சொந்த மண்ணில் ராஜஸ்தானை தோற்கடித்து கோப்பையை வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தி சரித்திரம் படைத்தது. மேலும் இந்த வருடம் வரலாற்றிலேயே முதல் முறையாக 1000க்கும் மேற்பட்ட சிக்ஸர்கள் விளாசப்பட்டதால் அடுத்து ஐபிஎல் எப்போது தொடங்கும் என்று இப்போதே ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் அளவுக்கு இந்த வருட ஐபிஎல் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

- Advertisement -

ஒளிபரப்பு உரிமம்:
முன்னதாக ஐபிஎல் போட்டிகளை மைதானத்திற்கு சென்று பார்க்க முடியாத பெரும்பாலான ரசிகர்கள் தொலைக்காட்சி மற்றும் மொபைல் வாயிலாக நேரடியாக கண்டு களிக்கிறார்கள். அதை ஆரம்ப காலகட்டங்களில் சோனி குழுமம் ஒளிபரப்பி வந்த நிலையில் சமீப காலங்களில் ஸ்டார் ஸ்போர்ட் ஒளிபரப்பி வந்தது. அந்த நிலைமையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுமத்தின் ஐபிஎல் ஒளிபரப்பு ஒப்பந்தம் நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2022 தொடருடன் முடிந்தது. அதனால் அடுத்த ஒளிபரப்பு ஒப்பந்தம் அதாவது 2023 – 2027 காலகட்டத்திற்கான ஒப்பந்தத்தை கோருவதற்காக கடந்த மாதமே பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டது.

IPL

அதில் ரிலையன்ஸ் வியாகாம்18, சோனி, ஜீ குழுமம், டிஸ்னி, அமேசான் என முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உரிமை கோரின. இருப்பினும் கடைசி நேரத்தில் அமேசான் அந்த ஏலத்தில் காரணமின்றி வெளியேறியது. அந்த நிலையில் சமீபத்தில் நடந்த வீரர்களுக்கான ஏலத்தை போலவே இந்த ஒளிபரப்பு ஏலம் ஜூன் 12, 13 ஆகிய தேதிகளில் மும்பையில் 2 நாட்கள் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் மொத்தம் 4 பிரிவுகள் உள்ளது. அவையாவன:

- Advertisement -

1. இந்தியா மற்றும் அதை சேர்ந்த துணை நாடுகளில் ஒளிபரப்பும் தொலைக்காட்சி ஒப்பந்தத்தின் அடிப்படை விலை 49 கோடி, ஒரு ஏலம் கேட்கும்போது 55 லட்சம் அடிப்படை தொகை அதிகமாக கேட்க வேண்டும்.

IPL 2022 (2)

2. இந்தியா மற்றும் அதை சேர்ந்த துணையை நாடுகளில் ஒளிபரப்பும் டிஜிட்டல் (மொபைல் மற்றும் ஆன்லைன் ஒளிபரப்பு) ஒப்பந்தத்தின் அடிப்படை விலை 33 கோடி, ஒரு ஏலம் கேட்கும்போது 50 லட்சம் அடிப்படை தொகை அதிகமாக கேட்க வேண்டும்.

- Advertisement -

3. எக்ஸ்க்ளூசிவ் அல்லாத தருணங்களை ஒளிபரப்புவதற்கான ஒப்பந்தம். அதற்கு ஒரு ஏலம் கேட்கும்போது 15 லட்சம் அடிப்படை தொகை அதிகமாக கேட்க வேண்டும்.

IPL 2022

4. உலகின் இதர பகுதிகளில் ஒளி பரப்புவதற்கான ஒப்பந்தத்தின் அடிப்படை விலை 3 கோடி, ஒரு ஏலம் கேட்கும்போது 10 லட்சம் அடிப்படை தொகை அதிகமாக கேட்க வேண்டும்.

- Advertisement -

ரசிகர்கள் வியப்பு:
மேற்குறிப்பிட்ட 4 பிரிவுகளில் ஒளிபரப்பு உரிமைகளை வாங்குவதற்கான ஏலம் இன்று காலை 11 மணிக்கு மும்பையில் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. தற்போது பிரமாண்ட வளர்ச்சி கண்டுள்ள ஐபிஎல் இந்த வருடம் 74 போட்டிகளாக விரிவடைந்தது போல் வரும் காலங்களில் 84 அல்லது 94 போட்டிகளாக அதிகரிக்கப்படும் என்று ஒப்பந்ததாரர்களுக்கு பிசிசிஐ உறுதியளித்துள்ளது. அதனால் கோடிகளை பார்க்காமல் பணத்தை அள்ளி இறைக்க தொடங்கிய ஏலதாரர்கள் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் மீடியா என தங்கள் விருப்பத்திற்கு ஏற்றார்போல் ஒளிபரப்பு உரிமையை வாங்கத் துவங்கினார்.

IPL

ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒருமுறை ஏலம் கேட்கப்படும் என்பதன் அடிப்படையில் 11 மணி முதல் 4 மணி வரை சூடு பறக்க நடைபெற்ற இந்த ஏலத்தின் மொத்தத் தொகை 40000 கோடிகளை கடந்தது. இறுதியில் முதல்நாள் முடிவில் மாலை 6 மணியளவில் 43050 கோடிகளுடன் நிறைவு பெற்றுள்ளது.

அதில் தொலைக்காட்சி உரிமம் 23000 கோடிக்கும் டிஜிட்டல் உரிமம் 19000 கோடிக்கும் முதல் நாளில் ஏலம் போயுள்ளது. இது கடந்த ஏலத்தை விட 2.5 மடங்கு அதிகமாகும் என்பதால் முதல் நாளிலேயே எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக பணத்தை பிசிசிஐ பார்த்துள்ளது. தற்போதைய நிலைமையில் ஒரு போட்டியின் தொலைக்காட்சி மதிப்பு 100 கோடியை கடந்துள்ளது. டிஜிட்டல் மதிப்பு 48 கோடிகளை தாண்டியுள்ளது. இது நாளைய 2-வது நாளில் 60000 கோடியை தொடும் என்ற செய்தி ரசிகர்களை வாய் மேல் கை வைக்க வைக்கிறது.

Advertisement