2021 ஐபிஎல் ஏலத்திற்கு பின் சிஎஸ்கே அணி மிகவும் வலிமையான அணியாக பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே அணியில் மொயின் அலி, கிருஷணப்பா கவுதம், புஜாரா போன்ற வீரர்கள் இணைந்துள்ளனர். இதனால் அணியின் டெயில் எண்ட்டும் மிக சிறப்பாக இருக்கிறது. கடந்த சீசனில் ஏற்பட்ட அவமானத்திற்கு சிஎஸ்கே இந்த சீசனில் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி ஒரு முக்கியமான வீரரை எக்ஸ் பேக்டராக பயன்படுத்தும் என்று கூறப்படுகிறது.
தற்போது சிஎஸ்கே அணியில் ஓப்பனிங் வீரராக ரூத்துராஜ் கண்டிப்பாக ஆடுவார். அதேபோல் டு பிளசிஸ், உத்தப்பா ஆகிய இரண்டு பேர் மாறி மாறி ஒப்பனர்களாக இறங்க வாய்ப்புள்ளது.
வெளிநாட்டு வீரர்களுக்கான காம்பினேஷன் இடிக்கும் போது உத்தப்பாதான் ஓப்பனிங் இறங்குவார் என்று கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் சிஎஸ்கே அணி மொயின் அலியை எக்ஸ் பேக்டராக பயன்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
இவரை இடம்மாற்றி இறங்க வைக்கும் அதிரடி பிளான் சிஎஸ்கே விடம் உள்ளது. அதாவது இவரை 5வது வீரராக மட்டுமே இறங்க வைக்க மாட்டார்கள். தோனிக்கு பின் பேட்டிங் இறங்க ஜடேஜா, சாம் கரன், பிராவோ இருக்கிறார்கள். இதனால் சிஎஸ்கேவில் சில போட்டிகளில் மொயின் அலி சோதனை முயற்சியாக ஓப்பனிங் இறங்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
சிஎஸ்கேவிற்கு பவர் பிளேவில் ஆட நல்ல வீரர்கள் இல்லை. பவர் பிளேவில் அதிரடியாக அடித்து 50+ ரன்களை எடுக்கும் அளவுக்கு வீரர்கள் இல்லை . இதனால் மொயின் அலியை சிஎஸ்கே எக்ஸ் பேக்டர் போல பயன்படுத்தும் என்று கூறப்படுகிறது. இவரை போட்டிக்கு ஏற்றபடி பேட்டிங் ஆர்டர் மாற்றி மாற்றி இறங்குவார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் சாம் கரன் மற்றும் மொயின் அலி ஆகியோர் கூட துவக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த வருடம் துவக்க ஓவர்களில் அதிரடியாக விளையாட வீரர்கள் இல்லாதததால் மிடில் ஓவர்களில் தாங்கள் கஷ்டப்பட்டதாக தோனி வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். இதன்காரணமாக இம்முறை அதிரடியான துவக்கத்தை கொடுக்க நிச்சயம் தோனி வெளிநாட்டு வீரர்களையே களமிறக்குவார் என்று தெரிகிறது.