இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான மொயின் அலி கடந்த 2014-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 68 டெஸ்ட் போட்டிகள், 138 ஒருநாள் போட்டிகள் மற்றும் 92 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அது தவிர்த்து கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர் 67 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ஓய்வை அறிவித்த மொயின் அலி :
கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக விளங்கி வரும் மொயின் அலி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தார்.
ஆனால் அதன்பின்னர் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அழைப்பை ஏற்று இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கம்பேக் கொடுத்திருந்தார். இந்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற உள்ள ஒருநாள் தொடருக்கான அணியில் இடம் கிடைக்காத வேளையில் அவர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்காக பல சிறப்பு மிக்க வெற்றிகளில் பங்காற்றியுள்ள அவர் தனது ஓய்வு முடிவு குறித்து பேசுகையில் கூறியதாவது : நான் இங்கிலாந்து அணிக்காக மீண்டும் விளையாட முயற்சி செய்யலாம். ஆனால் நான் அதை செய்ய மாட்டேன் என்பதே நிதர்சனமான உண்மை. தற்போது நான் ஓய்வு பெறுவது சரி என்று நினைக்கிறேன்.
ஏனெனில் இங்கிலாந்து அணி தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. எனவே அடுத்த தலைமுறை வீரர்களுக்கான நேரம் இது என்பதை உணர்ந்து தான் இந்த முடிவை எடுத்துள்ளேன். இதுவரை நான் இங்கிலாந்து அணிக்காக முழு பங்களிப்பை வழங்கியே விளையாடியுள்ளேன்.
இதையும் படிங்க : விராட் கோலி இந்த குறையை மட்டும் சரி செய்தே ஆக வேண்டும்.. முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா வேண்டுகோள்
இதுவரை எனது கிரிக்கெட் பயணத்தில் உடனிருந்த அனைவருக்கும் நன்றி என்று மொயின் அலி இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து அவர் ஓய்வு பெற்றாலும் உலகெங்கிலும் உள்ள டி20 லீக் போட்டியில் அவர் தொடர்ந்து விளையாடுவார் என்பது உறுதி.



