
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார். எதிர்கால இந்திய அணியின் நிரந்தர கேப்டனாக பார்க்கப்படும் அவர் டி20 போட்டிகளிலும் துணை கேப்டன் பதவியை பெற்றுவிட்டார். அதோடு ஒருநாள் போட்டிகளிலும் விரைவில் அவர் ரோகித் சர்மாவிற்கு பதிலாக புதிய கேப்டனாக அறிவிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டுகிறது.
இப்படி மூன்று வகையான இந்திய அணிக்கும் கேப்டனாக மாறவுள்ள சுப்மன் கில் அடுத்த நட்சத்திரம் என்றும் பாராட்டப்பட்டு வருகிறார். நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் கேப்டனாக தனது முதல் தொடர்கிலேயே அதுவும் இங்கிலாந்து மண்ணில் 750 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தியிருந்தார்.
அதோடு இந்திய அணியின் கேப்டனாகவும் 269 ரன்களை குவித்து சாதனை நிகழ்த்தியிருந்தார். இப்படி இங்கிலாந்து தொடரில் ஏகப்பட்ட சாதனைகளை நிகழ்த்திய சுப்மன் கில் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் துவக்க வீரராக இடம்பிடித்து விளையாடி வருகிறார். இந்நிலையில் அடுத்த பேப் போர் வீரர்களில் சுப்மன் கில்லும் ஒருவராக இருப்பார் என இங்கிலாந்து அணியின் அனுபவ வீரர்களான மொயின் அலி மற்றும் ஆதில் ரசீத் ஆகியோர் சில கருத்துக்களை ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டனர்.
அந்த வகையில் அவர்கள் கூறியதாவது : சுப்மன் கில் பேட்டிங் செய்யும் விதத்தைப் பார்த்தால் மிக எளிமையாக விளையாடி ரன்களை குவிக்கிறார். கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக அவர் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதனால் நிச்சயம் இன்னும் சில ஆண்டுகளில் அவர் மிகப்பெரிய வீரராக வளர்ந்திருப்பார்.
ஒருநாள் போட்டிகளை பொருத்தவரை 59 சராசரியுடன் விளையாடி வரும் அவர் டி20 போட்டிகளில் தனது திறனுக்கு ஏற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஆனால் நிச்சயம் இனி அதையும் பூர்த்தி செய்து டி20 போட்டிகளிலும் அசத்துவார் என்று நினைக்கிறேன். அதோடு டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை இங்கிலாந்து மண்ணில் இப்படி ஒரு ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளது அவருடைய பிரமாதமான பேட்டிங்கிற்கு சான்றாக உள்ளது.
இதையும் படிங்க : பிரைன் லாரா எனக்கு குடுத்த இந்த அட்வைஸ் தான் என்னோட சிறப்பான ஆட்டத்துக்கு காரணம் – அபிஷேக் சர்மா
இங்கிலாந்து மண்ணில் ஷார்ட் பால்களுக்கு நிறைய பிரச்சனை பேட்ஸ்மேன்களிடம் இருக்கும். ஆனால் சுப்மன் கில் அதை எதிர்த்தும் எளிதாக விளையாடுகிறார். இப்படி பல வீரர்கள் செய்து நாங்கள் பார்த்தது கிடையாது. அந்த அளவிற்கு சுப்மன் கில் சிறப்பான பேட்டிங் டெக்னிக்குடன் விளையாடி வருகிறார் என அவர்கள் இருவரும் கூறியது குறிப்பிடத்தக்கது.