இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா கடந்த 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 77 ஆட்டங்களில் விளையாடி 1 சதம் மற்றும் 9 அரைசதம் என 1816 ரன்கள் குவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் தனது மிகச் சிறப்பான அதிரடியை வெளிப்படுத்திய அவருக்கு கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.
பிரைன் லாரா கொடுத்த அட்வைஸ் தான் சிறப்பான ஆட்டத்திற்கு காரணம் : அபிஷேக் சர்மா
அந்த வகையில் தனக்கு கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட அபிஷேக் சர்மா இதுவரை இந்திய அணிக்காக 19 போட்டிகளில் விளையாடி 2 சதம் மற்றும் 2 அரைசதம் என 596 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். இளம் துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் மிகச் சிறப்பான அதிரடியை காண்பித்ததால் தற்போது ஆசிய கோப்பை தொடரின் முதன்மை வீரராக பங்கேற்று விளையாடி வருகிறார்.
அதுமட்டுமின்றி எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடரிலும் அவரே இந்திய அணியின் துவக்க வீரராக களமிறங்குவார் என்பது உறுதி. இந்நிலையில் டி20 போட்டிகளில் தனது அதிரடியான ஆட்டத்திற்கு காரணமே பிரைன் லாரா கொடுத்த ஆலோசனைகள் தான் என்று சில கருத்துக்களை அவர் பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அபிஷேக் ஷர்மா கூறியதாவது :
நான் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடும் போது அந்த அணியின் மென்டராக இருந்த பிரைன் லாரா என்னுடைய ஆட்டத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து பந்துவீச்சாளர்களுக்கு எதிராக எப்படி ஆதிக்கம் செலுத்த வேண்டும்? என்பது குறித்து நிறைய ஆலோசனைகளை வழங்கினார். அதுமட்டும் இன்றி பயிற்சியிலும் அவர் கூடுதல் கவனத்தை செலுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
அதிலும் குறிப்பாக நான் நல்ல ஃபார்மில் இருக்கும்போது இரண்டு மடங்கு பயிற்சியை அதிகரிக்க வேண்டும் என்று கூறினார். ஏனெனில் நல்ல பார்மில் இருக்கும் ஒரு பேட்ஸ்மேனுக்கு எதிராக பந்துவீச்சாளர்கள் அதிக திட்டங்களை வகுப்பார்கள். எனவே நாமும் அதற்கு ஏற்றவாறு இன்னும் அதிகமாக பயிற்சி செய்ய வேண்டும் கூறினார்.
இதையும் படிங்க : 8 ரன்னில் வென்று டிவிஸ்ட் வைத்த வங்கதேசம்.. சூப்பர் 4 செல்ல இலங்கை, ஆப்கான் செய்ய வேண்டியது இதோ
அப்படி செய்தால் தான் பவுலருக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த முடியும் என்றும் கூறினார். அதுமட்டுமின்றி பயிற்சியின் போதும் எனது அருகில் இருந்து எனது பேட்டிங்கில் முன்னேற்றத்தை காணவும் என்னை அவரே செதுக்கினார் என அபிஷேக் ஷர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.



