Shikhar Dhawan : தவானுக்காக ஆறுதல் சொன்ன இந்திய பிரதமர் – மோடி

Dhawan
- Advertisement -

இந்த உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியின் போது ஷிகர் தவான் தனது இடது கை பெருவிரல் பகுதியில் காயம் அடைந்தார். அதனால் சில போட்டிகளில் அவர் விளையாடமாட்டார் என்று அணி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Dhawan

- Advertisement -

அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட்டை இங்கிலாந்துக்கு அனுப்பியது பிசிசிஐ. ஆனாலும் தவான் காயம் குணமடைந்து நிச்சயம் விளையாடுவார் என்று கோலி தெரிவித்தார். அதனால் தவானுக்கு பதில் ராகுல் துவக்க வீரராகவும் விஜய் சங்கர் 4மிடில் ஆர்டரிலும் சேர்க்கப்பட்டனர்.இந்நிலையில் தவானின் காயம் குணமுடைய இன்னும் நாட்கள் அதிகரிக்கும் என்பதால் தவானை அதிகாரபூர்வமாக அணியில் இருந்து வெளியேற்றியது பி.சி.சி.ஐ

இந்நிலையில் இந்திய அணியின் வீரரான தவானின் ட்விட்டர் பதிவுக்கு பதில் அளித்த இந்திய பிரதமர் மோடி அன்புள்ள தவான் பிட்ச் நிச்சயம் உங்களை இழந்து வாடும் என்பதில் சந்தேகம் வேண்டாம். நீங்கள் விரைவில் குணமாகி மீண்டும் களத்திற்கு வருவீர்கள். நாட்டுக்காக நிறைய வெற்றிகளை குவிப்பீர்கள் என நம்புகிறேன் என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறும் முன் தனது ரசிகர்களுக்காக உருக்கமான வீடியோ பதிவு ஒன்றினை வெளியிட்டார் தவான் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement