- Advertisement -
ஐ.பி.எல்

மகளிர் ஐபிஎல்: 8 ரன்ஸ்.. ஹாட்ரிக் வருடமாக டெல்லிக்கு நேர்ந்த சோகம்.. மும்பை 12வது கோப்பையுடன் தொட முடியாத சாதனை

மகளிர் ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டி மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது. மும்பையில் நடைபெற்ற அந்தப் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து நேரடியாக ஃபைனலுக்கு தகுதிப் பெற்ற டெல்லியை 2வது இடத்தைப் பிடித்து எலிமினேட்டரில் போராடி வந்த மும்பையை எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

அடுத்ததாக களம் இறங்கிய மும்பை அணிக்கு யாஸ்டிக்கா பாட்டியா 8, ஹெய்லே மேத்தியூஸ் 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். ஆனால் மிடில் ஆர்டரில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் அதிரடியாக விளையாடி 66 (44) ரன்கள் குவித்தார். அவருடன் நிதானமாக விளையாடிய நட் ஸ்கீவர் 30 (28) ரன்கள் எடுத்தார். கடைசியில் கமலினி 10, அமோஞ்சோட் கௌர் 14*, சஸ்கிரிட் குப்தா 8* ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

மும்பை அசத்தல்:

அதனால் 20 ஓவரில் மும்பை 149-7 ரன்கள் எடுத்த நிலையில் டெல்லிக்கு அதிகபட்சமாக மாரிச்சென் காப் 2, ஜோனேசன் 2, சாரிணி 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அடுத்து களமிறங்கிய டெல்லிக்கு ஷபாலி வர்மா 13, கேப்டன் மெக் லென்னிங் 4, ஜெஸ் ஜோனேசன் 13 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். போதாகுறைக்கு அனபெல் சதர்லாந்து 2 ரன்களில் அவுட்டாகி அழுத்தத்தை உண்டாக்கினார்.

அதன் காரணமாக 44-4 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணிக்கு அதிரடியாக விளையாட முயற்சித்த ஜெமிமா ரோட்ரிகஸ் 30 (21) ரன்களில் அவுட்டானார். அதே போல மிடில் ஆர்டரில் மாரிச்சென் காப் 40 (26) ரன்கள் எடுத்து போராடி அவுட்டானார். இறுதியில் நிக்கி பிரசாத் 25* (23) ரன்களை எடுத்தும் 20 ஓவரில் டெல்லியை 141-9 ரன்களுக்கு கட்டுப்படுத்திய மும்பை 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

டெல்லியின் ஹாட்ரிக் சோகம்:

அந்த அணிக்கு அதிகபட்சமாக எமிலியா கெர் 2, நட் ஸ்கீவர் விக்கெட்டுகளை சாய்த்தனர். இதையும் சேர்த்து 2வது முறையாக மகளிர் ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்ற மும்பை அணி சாதனைப் படைத்தது. இது போக ஆடவர் ஐபிஎல், சிபிஎல் என ஒட்டுமொத்த டி20 தொடர்களில் மும்பை அணி 12வது கோப்பையை வென்று யாராலும் தொட முடியாது சாதனை படைத்தது.

இதையும் படிங்க: 2014 வீழ்ச்சிக்கு 2018 எழுச்சி மாதிரி பதிலடி கொடுக்க ஆசை.. ஆனா ஆஸியில் என் டெஸ்ட் கேரியர் ஓவர்.. கோலி அறிவிப்பு

2, 3வது இடத்தில் கொல்கத்தா, சென்னை அணி 8, 7 கோப்பைகளுடன் உள்ளன. மறுபுறம் 2023, 2024, 2025* ஆகிய 3 மகளிர் ஐபிஎல் தொடர்களிலும் டெல்லி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து நேரடியாக ஃபைனலுக்கு தகுதி பெற்றது. ஆனால் அந்த 3 இறுதிப் போட்டிகளிலும் தோல்வியை மட்டுமே சந்தித்த அந்த அணி ஹாட்ரிக் முறையாக கோப்பையை கோட்டை விட்டு சோகத்தை சந்தித்தது.

- Advertisement -