இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடர்களில் சுமாராக விளையாடினார். குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் முதல் போட்டியில் சதத்தை அடித்த விராட் கோலி தொடர்ந்து அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கடுத்த போட்டிகளில் தொடர்ந்து அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் அவர் தனது விக்கெட்டை தாரை வார்த்தது இந்திய ரசிகர்களையே கடுப்பாக வைத்தது.
அவருடைய மோசமான ஆட்டம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இந்தியா முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேற வித்திட்டது. இந்நிலையில் 2014 இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற தொடரில் மோசமாக விளையாடிய தாம் 2018இல் அதற்கு சிறப்பாக விளையாடி பதிலடி கொடுத்ததாக விராட் கோலி தெரிவித்துள்ளார். அதே போல ஆஸ்திரேலியாவிலும் மீண்டும் அசத்த விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் ஓவர்:
ஆனால் அடுத்த ஆஸ்திரேலிய தொடர் 2028 – 29 சீசனில் நடைபெற உள்ளது. எனவே ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தாம் விளையாடி முடித்து விட்டதாக விராட் கோலி அறிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நான் எவ்வளவு ஏமாற்றமடைந்தேன் என்பதை நீங்கள் என்னிடம் கேட்டால் சமீபத்திய ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் எனக்கு மோசமாக இருந்தது”
“ஆனால் என்னால் அப்படி அதைப் பார்க்க முடியாது. இன்னும் 4 வருடங்களுக்குப் பின் நடைபெறும் ஆஸ்திரேலியா தொடரில் நான் இல்லாமல் இருக்கலாம். அதை சரி செய்யும் வாய்ப்பு எனக்கு இல்லை. எனவே கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பதில் நீங்கள் நிம்மதியுடன் இருக்க வேண்டும். 2014இல் இங்கிலாந்தில் சுமாராக விளையாடிய என்னால் மீண்டும் 2018இல் அங்கே சென்று முடிந்ததை செய்ய முடிந்தது”
இதுவே போதும்:
“இங்கே அது போல இருக்காது. அதற்காக பதற்றமடையாதீர்கள். ஓய்வு பற்றி எந்த அறிவிப்பையும் நான் விளையாடவில்லை. இப்போதும் கிரிக்கெட்டில் விளையாடும் ஆர்வமும் காதலும் இருக்கிறது. அதே சமயம் வெளியிலிருந்து அதைப்பற்றி சிந்திக்கும் போது உங்களுக்கு நீங்களே அதிக பாரத்தை சுமப்பீர்கள். அது போன்ற அனுபவத்தை நான் ஆஸ்திரேலியாவில் சந்தித்தேன்”
இதையும் படிங்க: மாஸ்டர்ஸ் லீக் 2025: சச்சினின் இந்தியா – லாராவின் வெ.இ மோதும் ஃபைனலை எந்த சேனலில் பார்க்கலாம்?
“ஏனெனில் முதல் போட்டியில் நல்ல ஸ்கோர் அடித்ததால் இங்கிருந்து அசத்தலாம் என்று நினைத்தேன். அடுத்ததாக எனக்கு (இங்கிலாந்து) பெரிய தொடர் இருக்கிறது. அது அந்த வழியில் திரும்பாமல் போனால் அதை எப்படி நீங்கள் பார்ப்பீர்கள்? என்னைப் பொறுத்த வரை இவை அனைத்தும் ஏற்றுக் கொள்வதைப் பற்றியது. அது தான் நடந்தது. நான் எனக்கு நானே உண்மையாக இருக்கிறேன்” என்று கூறினார்.