- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஹர்மன்ப்ரீத் வெச்சுகிட்டு 2025 உ.கோ ஜெய்க்க முடியாது.. மந்தனாவும் வேண்டாம்.. அவரை கேப்டனாக்கலாம்.. மித்தாலி ராஜ்

ஐசிசி 2024 மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி லீக் சுற்றுடன் பரிதாபமாக வெளியேறியது. அத்தொடரில் முதல் போட்டியிலேயே நியூசிலாந்திடம் படுதோல்வியை சந்தித்த இந்தியா இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை போராடி வென்றது. மூன்றாவது போட்டியில் இலங்கையிடம் பெரிய வெற்றியைப் பெற்ற இந்தியா நான்காவது போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவிடம் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

அப்போட்டியில் முக்கிய வீராங்கனைகள் ஏமாற்றத்தை கொடுத்ததால் தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவுக்கு கேப்டன் ஹர்மன்ப்ரீத் மிடில் ஆர்டரில் போராடினார். ஆனால் கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்ட போது 54* ரன்களில் இருந்த அவர் ஃபினிஷிங் செய்யாமல் ஏமாற்றத்தைக் கொடுத்தார். இது போக சமீப காலங்களாகவே தடுமாற்றமாக விளையாடும் அவர் 2024 ஆசியக் கோப்பை ஃபைனலில் அல்வா கேட்சை கோட்டை விட்டு இலங்கையிடம் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமானார்.

- Advertisement -

கேப்டனை மாத்துங்க:

அதனால் ஹர்மன்ப்ரீத்தை நீக்கி விட்டு கடந்த மகளிர் ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணிக்காக வென்ற ஸ்மிரிதி மந்தனாவை கேப்டனாக நியமிக்கலாம் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர். இந்நிலையில் ஹர்மன்ப்ரீத்துக்கு பதிலாக 24 வயதாகும் ஜெமிமா ரோட்ரிகஸை அடுத்த கேப்டனாக நியமிக்கலாம் என்று முன்னாள் இந்திய கேப்டன் மிதாலி ராஜ் கூறியுள்ளார்.

குறிப்பாக அடுத்த வருடம் இந்தியாவில் 2025 மகளிர் உலகக் கோப்பை நடைபெற உள்ளது. அதை வெல்வதற்கு இப்போதே தாமதிக்காமல் புதிய கேப்டனை நியமிப்பது அவசியம் என்றும் மித்தாலி ராஜ் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த முடிவை எடுப்பது பிசிசிஐ மற்றும் தேர்வாளர்களை பொறுத்தது. ஆனால் ஒருவேளை அவர்கள் கேப்டனை மாற்ற விரும்பினால் அதை இப்போதே செய்தாக வேண்டும்”

- Advertisement -

ஜெமிமா நல்ல தேர்வு:

“ஏனெனில் நீங்கள் தாமதப்படுத்தினால் 2025 இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை தாமதமாகலாம். எனவே அந்த முடிவை இப்போது செய்யவில்லையெனில் பின்னர் செய்யாதீர்கள். ஏனெனில் உலகக்கோப்பை நெருக்கமாக வந்து விடும். மந்தனாவை தேர்வுக் குழுவினர் துணை கேப்டனாக நீண்ட காலம் கருதலாம்”

இதையும் படிங்க: குக், ஏபிடியுடன் ஐசிசியின் மாபெரும் கெளரவத்தை பெற்ற இந்திய ஜாம்பவான் வீராங்கனை.. வெளியான அறிவிப்பு

“ஆனால் தனிப்பட்ட முறையில் நான் 24 வயதாகும் ஜெமிமா கேப்டனாவதை விரும்புகிறேன். அனைவரிடமும் பேசி களத்தில் நல்ல எனர்ஜியை வெளிப்படுத்தி இந்தத் தொடரிலும் நம்மைக் கவர்ந்த அவரால் நீண்ட காலம் டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக செயல்பட முடியும்” என்று கூறினார். மேலும் ஜெமிமா பேட்டிங்கில் பெறும் நல்ல துவக்கத்தை பெரிய ரன்களாக குவித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றுவது அவசியம் என்றும் மித்தாலி ராஜ் அறிவுரை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -