- Advertisement -
உலக கிரிக்கெட்

ஸ்லெட்ஜ் செய்த வெ.இ.. 15 பந்தில் 5 விக்கெட்ஸ் 27க்கு அவுட்டாக்கி.. உலக சாதனை படைத்து ஓடவிட்ட ஸ்டார்க்

வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 3 – 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றுள்ளது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்ற அத்தொடரின் முதல் 2 போட்டிகளில் வென்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. அத்தொடரின் 3வது போட்டி பகலிரவாக இளஞ்சிவப்பு நிற பந்தில் ஜமைக்காவில் நடைபெற்றது.

ஜூலை 12ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 225 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 46, ஸ்டீவ் ஸ்மித் 48 ரன்கள் எடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிகபட்சமாக சமர் ஜோசப் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்ததாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸை 143க்கு சுருட்டிய ஆஸ்திரேலியா 82 ரன்கள் முன்னிலை பெற்றது.

- Advertisement -

மிரட்டிய ஸ்டார்க்:

அதிகபட்சமாக ஜான் கேம்பல் 36 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஸ்காட் போலண்ட் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியாவை சிறப்பாக பவுலிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 121க்கு ஆல் அவுட் செய்தது. அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 42 ரன்கள் எடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிகபட்சமாக சமர் ஜோசப் 4, அல்சாரி ஜோசப் 5 விக்கெட்டுகள் எடுத்தார்கள்.

அந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் 4 பந்துகளை எதிர்கொண்ட மிட்சேல் ஸ்டார்க்கை 0 ரன்களில் ஜெய்டேன் சீல்ஸ் கிளீன் போல்ட்டாக்கினார். அப்போது “வெளியே போ” என்ற வகையில் அவர் ஸ்டார்க்கை ஸ்லெட்ஜிங் செய்து அனுப்பி வைத்தார். அதை ஸ்டார்க் மனதில் வைத்தாரா என்று தெரியவில்லை. கடைசியில் 204 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஸ்டார்க் நெருப்பாக பந்து வீசினார்.

- Advertisement -

15 பந்தில் உலக சாதனை:

அவருடைய அனல் பறந்த பந்து வீச்சில் ஜான் கேம்பல் 0, லூயிஸ் 4, கேவ்லோன் ஆண்டர்சன் 0, ப்ரெண்டன் கிங் 0, ஷாய் ஹோப் 2 ரன்களில் அவுட்டானார்கள். அந்த வகையில் வெறும் 15 பந்துகளில் 5 விக்கெட்டுகளை எடுத்த ஸ்டார்க் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் வேகமாக 5 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற உலக சாதனையை படைத்தார். இதற்கு முன் 1947ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் எர்னி டோஷக், 2015இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து ஸ்டுவர்ட் ப்ராட், 2021இல் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் ஸ்காட் போலண்ட் தலா 19 பந்துகளில் 5 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனை.

இதையும் படிங்க: ஜடேஜாவுக்கு 10க்கு 10 மார்க்.. ஆனா அந்த 2 சான்ஸ் எடுத்துருந்தா இந்தியா ஜெய்ச்சுருக்கும்.. கவாஸ்கர் ஆதங்கம்

அதோடு நிற்காத ஸ்டார்க் 6வது விக்கெட்டாக சீல்ஸை 0 ரன்களில் க்ளீன் போல்ட்டாக்கி வெளியே போ என்ற வகையில் கொண்டாடி பதிலடி கொடுத்து அனுப்பி வைத்தார். அவருடன் ஜோடி போட்ட போலண்ட் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்து வெஸ்ட் இண்டீஸ் கதையை முடித்தார். அதனால் வெஸ்ட் இண்டீஸை வெறும் 27க்கு சுருட்டிய ஆஸ்திரேலியா 176 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றி தன்னுடைய 100வது போட்டியில் 400 விக்கெட்டுகளை எடுத்த 4வது ஆஸ்திரேலிய வீரராக சாதனை படைத்த ஸ்டார்க் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -