
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் 5 சதங்கள் அடித்தும் தோல்வியை சந்தித்த முதல் அணியாக இந்தியா பரிதாப உலக சாதனை படைத்தது. ஆனால் அதற்கெல்லாம் அசராத இந்தியா 3வது போட்டியில் இங்கிலாந்தை புரட்டி எடுத்து 336 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.
பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்த அப்போட்டியில் இங்கிலாந்தை துவம்சம் செய்த இந்தியா 587, 427/6 ரன்களை விளாசி டிக்ளேர் வரலாற்றில் முதல் முறையாக 1000 ரன்கள் குவித்தது. குறிப்பாக கேப்டன் சுப்மன் கில் மட்டும் 269, 161 என 430 ரன்கள் அடித்து பல சாதனைகளைப் புரிந்தார். அதனால் வெளிநாட்டு மண்ணில் தங்களுடைய பெரிய வெற்றியைப் பெற்ற இந்தியா தொடரை சமன் செய்து இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்தது.
இந்நிலையில் இங்கிலாந்தில் இருக்கும் இப்போதைய மைதானங்களில் சுப்மன் கில்லுக்கு எதிராக தாம் பவுலிங் செய்ய மாட்டேன் என்று ஆஸ்திரேலியாவின் மிட்சேல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார். ஏனெனில் அங்குள்ள பிட்ச்கள் தார் ரோட் போல இருந்ததாகவும் அவர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சுப்மன் கில்லுக்கு எதிராக நான் பவுலிங் செய்ய மாட்டேன் என்பது உறுதி”
“அந்தப் போட்டிகளை நான் அதிகம் பார்ப்பதில்லை. ஆனால் ஸ்கோர் கார்டுகளை பார்ப்பேன். வேண்டுமானால் மார்னஸ் லபுஸ்ஷேன், அலெக்ஸ் கேரி, ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் இரவில் விழித்திருந்து தேநீர் இயந்திரத்துடன் அந்தப் போட்டியை பார்க்கக்கூடும். நான் ஸ்கோர்களைப் பார்ப்பேன். இங்கிலாந்தில் இருக்கும் எந்த குழந்தை அது போன்ற பிட்ச்சில் பவுலிங் செய்ய விரும்புவார்கள்?”
“ஆனால் செய்திகளில் அது இந்திய துணைக் கண்டத்தில் இருக்கும் பிட்ச் போல இருந்ததாக தெரிவிக்கப்பட்டன. அதை என்னால் நம்ப முடியவில்லை. அந்த பிட்ச்கள் பவுலர்களுக்கு மிருகத்தனமானது போல் தெரிகிறது. அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஆசஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக இதே போன்ற பிட்ச்சுகள் இருக்குமா? என்பதை நாங்கள் படிப்பதில்லை”
இதையும் படிங்க: கபில் தேவ் சாதனையை உடைத்து.. லார்ட்ஸில் பெயரை எழுதியதை கொண்டாடாதது ஏன்? பும்ரா விளக்கம்
“ஆனால் அவர்கள் முழுமையான நெடுஞ்சாலைகளில் விளையாடுகிறார்கள் என்று உட்கார்ந்து சொல்லலாம். ஒரு டெஸ்ட் போட்டிக்கான 300 ரன்களில் எதை எடுத்து இந்தியா பவுலிங் செய்கிறார்கள்? என்பது எனக்குத் தெரியாது. அவர்கள் (இங்கிலாந்து) சம நிலைக்காக விளையாடவில்லை. அந்தத் தொடரிலிருந்து நீங்கள் இந்தக் கருத்தை தான் எடுத்துக் கொள்ள முடியும்” என்று கூறினார்