இந்திய வீரரான இவருக்கு நாங்கள் அதிக வாய்ப்புகளை வழங்கிவிட்டோம். ஆட்டத்தையே மாத்திட்டாரு – ஸ்டார்க் புலம்பல்

Starc
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி தற்போது பாக்ஸிங் டே போட்டியாக மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஏற்கனவே வெற்றிபெற்றதால் இந்த போட்டியிலும் வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிக்க ஆஸ்திரேலிய அணியும், முதல் போட்டியில் அடைந்த தோல்வியை ஈடுசெய்யும் விதமாக இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணியும் விளையாடி வருகிறது.

Gill 2

- Advertisement -

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அடுத்ததாக முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக கேப்டன் ரஹானே 104 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 40 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த போட்டியில் ரகானே அடித்த இந்த சதத்திற்கு பல தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இதற்கு பின்னர் பல கேட்சிகளை விட்டு ஆஸ்திரேலிய வீரர்கள் மறைமுகமாக ரஹானேவிற்கு உதவி புரிந்துள்ளனர். ஏனெனில் இந்த போட்டியில் மட்டும் ஐந்து முறை அவுட்டாகி இருக்க வேண்டிய ரஹானே அதிர்ஷ்டத்தால் தப்பி சதத்தை நிறைவு செய்துள்ளார். இந்நிலையில் இது குறித்து பேசி உள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தனது கவலையை தெரிவித்துள்ளார்.

Rahane

இதுகுறித்து அவர் கூறுகையில் : ரஹானே அடித்த சதம் மிகச் சிறப்பானது அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அவர் நெருக்கடியை உள்வாங்கிக் கொண்டு இந்திய அணியின் ரன் குவிப்புக்கு தலைமை தாங்கி கப்பலை நிலை நிறுத்தினார். இங்கு அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இருப்பினும் ரஹானே சதம் அடிப்பதற்கு முன்பாக பல வாய்ப்புகளை எங்களுக்கு வழங்கினார்.

rahane 1

ஆனால் நாங்கள் ஒரு நான்கைந்து வாய்ப்புகளை தவற விட்டோம். அதில் 3-4 வாய்ப்பாவது நாங்கள் அவுட் செய்து இருக்க வேண்டும். ஆனால் இன்று அவர் சதம் அடிக்க வேண்டும் என்ற அதிர்ஷ்டம் அவருக்கு இருந்துள்ளது. அதனால் அவரது சதத்தை பூர்த்தி செய்துள்ளார் அவருக்கு என் வாழ்த்துக்கள் என்று ஸ்டார்க் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement