இதை மட்டும் பண்ணா போதும்.. சன் ரைசர்ஸை பொட்டளம் பண்ணிடலாம் – மிட்சல் ஸ்டார்க் பேட்டி

Starc
- Advertisement -

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே இன்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 10-ஆவது லீக் ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெல்லி கேப்பிடல்ஸ் அணியானது ஏழு விக்கெட் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் அணியானது முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

சன் ரைசர்ஸ் அணிக்கெதிரான எனது திட்டம் இதுதான் : மிட்சல் ஸ்டார்க்

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 18.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்களை மட்டுமே குவித்தது. சன் ரைசர்ஸ் அணி சார்பாக அனிகித் வருமா 74 ரன்களையும், கிளாஸன் 32 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியானது 16 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டெல்லி அணி சார்பாக டூப்ளிசிஸ் 50 ரன்களையும் ஜேக் பிரேசர் மெக்கர்க் 38 ரன்களையும் குவித்து அசத்தினர்.

இந்நிலையில் இந்த போட்டியின் போது பந்துவீச்சில் அசத்திய டெல்லி அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் 3.4 ஓவர்கள் வீசி 35 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்த போட்டியின் முதல் பாதி முடிந்த பின்னர் அவர் தனது பந்துவீச்சு குறித்து பேசுகையில் கூறியதாவது : சன் ரைசர்ஸ் எவ்வளவு பலம் வாய்ந்த அணி என்பது நமக்கு தெரியும்.

- Advertisement -

இருந்தாலும் பவர்பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டால் அவர்களை முற்றிலுமாக சுருட்ட முடியும் என்று நாங்கள் அறிந்து வைத்திருந்தோம். அந்த வகையிலேயே இந்த முதல் பாதியில் மிகச் சிறப்பாக பந்துவீசி அவர்களை சுருட்டியதில் மகிழ்ச்சி. புதிய அணிக்காக விளையாடுவது எனக்கு ஒரு புதிய அனுபவத்தை தந்துள்ளது. ஏனெனில் தற்போது நான் 35 வயதை எட்டி விட்டதால் இளமையான ஒரு வீரர் கிடையாது.

இதையும் படிங்க : 16 ஓவரில் பந்தாடிய டெல்லி.. இதெல்லாம் தோல்வியே இல்லை.. இதை செஞ்சு ஈஸியா வந்துருவோம்.. கமின்ஸ் பேட்டி

ஆனால் இன்னும் எனக்குள் கிரிக்கெட் எஞ்சியிருக்கிறது. தற்போது இளம் வீரர்களுடன் அமர்ந்து நிறைய பேசுகிறேன். அவர்களுக்கு என்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன் இப்போதும் நான் கிரிக்கெட்டை மிகவும் மகிழ்ச்சியுடன் விளையாடுகிறேன் என மிட்சல் ஸ்டார்க் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement