- Advertisement -
ஐ.பி.எல்

20 ஆவது ஓவரை வீசும்போது என் மனசுக்குள் ஓடியது இதுமட்டும் தான்.. ரொம்ப ஹேப்பி – ஆட்டநாயகன் மிட்சல் ஸ்டார்க்

டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இரண்டு அணிகளுமே சமமான ரன்களை குவிக்க போட்டி சூப்பர் ஓவர் வரை சென்று படு சுவாரசியத்தை ஏற்படுத்தி இருந்தது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

கடைசி ஓவரை வீசும்போது முழுமையாக நம்பினேன் – மிட்சல் ஸ்டார்க்

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவித்தது. பின்னர் 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சரியாக 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்ட்டுகளை இழந்து 188 ரன்கள் குவித்தது. இதன்காரணமாக போட்டி “டை”-யில் முடிவடைந்தது.

- Advertisement -

பின்னர் சூப்பர் ஓவரின் போது முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 பந்துகளில் 11 ரன்களுக்கு ஆட்டமிழக்க பின்னர் 12 என்று அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி 4 பந்துகளில் 13 ரன்கள் குவித்து அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் மட்டுமே தேவை என்கிற நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியே இந்த போட்டியில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் 20-வது ஓவரை மிகச் சிறப்பாக வீசிய மிட்சல் ஸ்டார்க் 6 பந்துகளில் 8 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்ததால் போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றது.

- Advertisement -

இப்படி போட்டி சூப்பர் ஓவர் வரை செல்லவும், இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றி பெறவும் ஸ்டார்க்கே காரணமாக திகழ்ந்ததால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது கடைசி ஓவர் குறித்து பேசியிந்த ஆட்டநாயகன் மிட்சல் ஸ்டார்க் கூறுகையில் : நான் என்னுடைய திறனை மட்டுமே நம்பி அந்த கடைசி ஓவரை வீசினேன். அதேபோன்று கடைசி ஓவரை வீச ஓடிவரும்போது எனக்கு ஒரு தெளிவான திட்டம் இருந்தது.

இதையும் படிங்க : இதனால் தான் ஸ்டார்க் ஆஸ்திரேலியாவின் லெஜண்ட்டா இருக்காரு.. வெற்றிக்கு பிறகு ஸ்டார்க்கை – பாராட்டிய அக்சர் படேல்

அதாவது எதிரில் நிற்கும் பேட்ஸ்மேனுக்கு பவுண்டரியை மட்டும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்று நினைத்து யார்க்கர் பந்துகளாக வீசினேன். அதிர்ஷ்டமும் என் வசம் இருந்ததால் இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றோம். கடந்த பல ஆண்டுகளாகவே நான் என்ன செய்து வருகிறேன் என்பது இதுபோன்ற போட்டிகளின் மூலம் தெரிகிறது. இந்த கடைசி ஓவரை மிகச் சிறப்பாக வீசியதில் மகிழ்ச்சி என ஸ்டார்க் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -