ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் டிசம்பர் 4-ஆம் தேதியான இன்று துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் குவித்துள்ளது.
இடது கை வேகப்பந்து வீச்சாளர்களில் வாசிம் அக்ரம் ஒரு சிகரம் : மிட்சல் ஸ்டார்க்
இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ஜோ ரூட் 202 பந்துகளை சந்தித்து 15 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 135 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். அவருடன் ஜோப்ரா ஆர்ச்சர் 32 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் களத்தில் உள்ளார்.
ஏற்கனவே முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இங்கிலாந்து அணியானது இரண்டாவது போட்டியில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் இந்த போட்டி சுவாரசியத்தை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது விளையாடிய ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
அந்தவகையில் போட்டியின் முதல் நாளான இன்று 19 ஓவர்களை வீசி 71 ரன்களை விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவர் எடுத்த இந்த 6 விக்கெட்டுகளின் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இடதுகை வேகப்பந்து வீச்சாளரான வாசிம் அக்ரமின் மாபெரும் சாதனையை முறியடித்துள்ளார். வாசிம் அக்ரம் டெஸ்ட் போட்டிகளில் 414 விக்கெட்டுகளை எடுத்து அதிக விக்கெட்டுகளை எடுத்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்தியிருந்தார்.
அவரது இந்த சாதனையை இன்று கடந்த ஸ்டார்க் 418 விக்கெட்டுகளை எடுத்து அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்நிலையில் வாசிம் அக்ரமின் சாதனையை உடைத்தது குறித்து பிறகு பேசிய மிட்சல் ஸ்டார்க் கூறுகையில் : வாசிம் அக்ரம் என்னை விட எவ்வளவோ மடங்கு சிறந்த பந்துவீச்சாளர். அவர் அருகில் கூட என்னால் நிற்க முடியாது.
இதையும் படிங்க : ரவீந்திர ஜடேஜா செய்த இந்த தவறால் தான் இந்தியா இரண்டாவது போட்டியில் தோத்தாங்க – இர்பான் பதான் தாக்கு
என்னை பொறுத்தவரை இடதுகை பந்துவீச்சாளர்களில் அவர் ஒரு ஜாம்பவான். இன்றளவும் கிரிக்கெட் பார்த்த சிறந்த பவுலர்களில் அவரும் ஒருவர். அவருடன் ஒப்பிட்டு என்னுடைய பெயரும் பேசப்படுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் அவரை விட நான் பெரிய பந்துவீச்சாளர் கிடையாது என நெகிழ்ச்சியுடன் பேசியிருந்தார். அவரது இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.



