இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது நேற்று ராய்ப்பூர் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் குவித்து அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தியது. இந்திய அணி சார்பாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் விராட் கோலி ஆகியோர் சதம் அடித்து அசத்தியிருந்தார்கள்.
இந்திய அணி தோற்க ரவீந்திர ஜடேஜா தான் காரணம் : இர்பான் பதான் தாக்கு
பின்னர் 359 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை வெகு சிறப்பாக எதிர்கொண்டு 49.2 ஓவர்களிலேயே 6 விக்கெட்டை இழந்து 362 ரன்கள் குவித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது.
இந்த போட்டியின் போது இந்திய அணி தோல்வியை சந்திக்க காரணமே பந்து வீச்சாளர்கள் தான் என்றும் பனிப்பொழிவின் காரணமாக பந்து வீச்சாளர்களால் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்ற ஒரு கருத்து பலரது மத்தியிலும் இருந்து வருகிறது. இந்நிலையில் பந்து வீச்சாளர்களை தாண்டி இந்த போட்டியில் தோல்வியை சந்திக்க ரவீந்திர ஜடேஜா விளையாடிய மெதுவான இன்னிங்ஸும் ஒரு காரணம் என முன்னாள் இந்திய வீரரான இர்பான் பதான் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : நேற்றைய போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்திக்க ஒரு முக்கிய காரணமாக இருந்தது ரவீந்திர ஜடேஜாவின் பேட்டிங் தான். ஏனெனில் கடைசி நேரத்தில் விளையாடும் அவர் 27 பந்துகளை சந்தித்து 24 ரன்கள் அடித்தது பிரச்சினையாக மாறும் என்று கமெண்டரியின் போதே சொன்னேன்.
நான் நினைத்தபடியே போட்டி முடிந்து அவரது மெதுவான இன்னிங்ஸ் தோல்விக்கு காரணமாக அமைந்தது. ஏனெனில் 300 ரன்களுக்கு மேல் இந்திய அணி எடுத்திருக்கும் போது பின் வரிசையில் விளையாடும் நீங்கள் 88 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினால் அது சரியானது கிடையாது. அவர் மெதுவாக விளையாடியது கூட பரவாயில்லை. ஆனால் இன்டன்ட் காண்பிக்காமல் விளையாடியது ஏமாற்றம் அளித்தது. ஒருவேளை அவர் அதிரடியாக விளையாடி இருந்தால் நிச்சயம் இன்னும் கூடுதலாக ரன்கள் வந்திருக்கும்.
இதையும் படிங்க : அவர் திரும்பி வந்தாலும்.. ருதுராஜ் கெய்க்வாட்டை தொடர்ந்து விளையாட வையுங்க – அஷ்வின் கோரிக்கை
டியூ இருக்கும் மைதானங்களில் இரண்டாவதாக பந்துவீசும் அணிக்கு பிரச்சனை அதிகமாக இருக்கும். எனவே முதலில் விளையாடும் போது பெரிய ரன்களை குவித்திருக்க வேண்டும். அந்த வகையில் இந்த போட்டியில் ஜடேஜா அதிரடியாக விளையாடாதது நமக்கு பாதகமாக அமைந்தது என இர்ஃபான் பதான் கூறியது குறிப்பிடத்தக்கது.



