அந்த இந்திய வீரர் என்னை கலாய்ச்சாரு.. ஐபிஎல் 2024 ஃபைனலில் மூடை ஸ்பாய்ல் பண்ணிட்டாங்க.. ஸ்டார்க் பேட்டி

Mitcheall Starc 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் கோடை காலத்தில் இந்திய ரசிகர்களை மகிழ்வித்து நிறைவு பெற்றது. வழக்கம் போல இம்முறையும் கோப்பையை வெல்வதற்காக 10 அணிகள் போட்டியிட்டன. அதில் சிறப்பாக விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10 வருடங்கள் கழித்து தங்களுடைய 3வது ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

பொதுவாக ஐபிஎல் தொடரில் கடந்த காலங்களில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் சுமாராகவே செயல்பட்டனர். அதே போல 24.75 கோடி என்ற வரலாறு காணாத தொகைக்கு வாங்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் மிட்சேல் ஸ்டார்க் கொல்கத்தா அணிக்காக ஆரம்பத்தில் சுமாராகவே செயல்பட்டார். அதனால் வழக்கம் போல ஒரு தரப்பு ரசிகர்கள் அவரை கிண்டலடித்தனர்.

- Advertisement -

சென்னையில் தாமதம்:
ஆனால் முக்கியமான நாக் அவுட் சுற்றில் குவாலிபயர் 1 போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற அவர் கொல்கத்தா ஃபைனலுக்கு செல்ல உதவினர். அத்துடன் ஹைதராபாத்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற இறுதிப்போட்டியிலும் ஆட்டநாயகன் விருதை வென்ற அவர் தன்னை சாம்பியன் பிளேயர் என்பதை நிரூபித்து வெற்றியில் பங்காற்றினார். அதனால் நீங்கள் 24.75 கோடிக்கு தகுதியானவர் என்று கடைசியில் அனைத்து ரசிகர்களும் அவரைப் பாராட்டினர்.

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற ஃபைனல் முடிந்ததும் விருது வழங்கும் விழாவை நடத்துவதற்கு ஐபிஎல் நிர்வாகம் சுமார் 2 மணி நேரம் தாமதம் செய்ததாக மிட்சேல் ஸ்டார்க் கூறினார். அது மூடை ஸ்பாய்ல் செய்தது போல் தங்களின் வெற்றிக் கொண்டாட்டத்தில் சுணக்கத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் கோப்பை வென்றதற்காக பிசிசிஐ 20 கோடி பரிசாக கொடுத்தது.

- Advertisement -

ஆனால் அது உங்களுடைய சம்பளத்தை விட மிகவும் குறைவாக இருப்பதாக தம்மை இந்திய வீரர் அங்ரிஸ் ரகுவன்ஷி கலாய்த்ததாகவும் ஸ்டார்க் கூறியுள்ளார். ஐபிஎல் 2024 ஃபைனல் பற்றிய தம்முடைய நினைவுகளை சமீபத்திய பேட்டியில் அவர் பகிர்ந்து பேசியது பின்வருமாறு. “விருது விழா 2 மணி நேரத்திற்கு பின் நடைபெற்றது. அப்போட்டி இரவு 10:00 மணிக்கே முடிந்து விட்டது. ஆனால் விருது வழங்கும் நடு இரவில் துவங்கியது”

இதையும் படிங்க: காலத்துக்கும் விளையாட முடியாது.. கம்பீர் அவர்கிட்ட பேசி ஒரு முடிவை எடுக்க வைக்கணும்.. பராஸ் மாம்ப்ரே பேட்டி

“அதனால் நாங்கள் கீழே உட்கார்ந்து இருந்தோம். அப்போது எங்களுக்காக 3வது இடத்தில் விளையாடும் அங்குரிஸ் ரகுவரன்சி வெற்றியாளருக்கு கொடுப்பதற்காக கொண்டு வந்த காசோலையை பார்த்தார். ஃபைனலில் வென்ற அணிக்கு 20 கோடி கொடுக்கப்பட்டது. அதைப் பார்த்த அவர் ஆஹா இது நீங்கள் வாங்கிய சம்பளம் கூட இல்லை என்று என்னிடம் சொன்னார்” எனக் கூறினார்.

Advertisement