IND vs AUS : இந்திய அணிக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இணையும் நட்சத்திர வீரர் – விவரம் இதோ

Mitchell Starc
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்த தொடரில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதேவேளையில் இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா அணியானது பெரிய சரிவினை சந்தித்துக்ளது.

IND vs AUS

- Advertisement -

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியானது அடுத்த இரண்டு போட்டிகளை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த மூன்றாவது போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த ஏகப்பட்ட வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டும் இன்றி அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் சொந்த காரணங்களுக்காக நாடு திரும்பி உள்ளார்.

அதேபோன்று வார்னர் கடந்த போட்டியில் காயமடைந்ததால் மூன்றாவது போட்டியில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ஜோஷ் ஹேசல்வுட்டுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று சுழற்பந்து வீச்சாளர் என டாட் மர்பியும் காயமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்படி தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரர்கள் பலருக்கு காயம் ஏற்பட்டு அவர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Starc

இந்நிலையில் தற்போது அந்த அணிக்கு ஒரு நற்செய்தியாக முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் மூன்றாவது போட்டிக்கான அணியில் இணைய உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை தனது வேகம் மற்றும் ஸ்விங் ஆகியவற்றால் திணற வைக்கும் மிட்சல் ஸ்டார்க் மூன்றாவது போட்டியில் இணைவது அந்த அணிக்கு சற்று பலத்தை அளிக்கலாம்.

- Advertisement -

இந்தியா போன்ற சமதள ஆடுகளங்களில் அவரால் சிறப்பான ரிவர்ஸ் ஸ்விங் பந்துகளை வீசி விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்பதால் தற்போதைக்கு அந்த அணிக்கு இருக்கும் ஒரே ஒரு ஆறுதலாக அவரது வருகையை பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : அவர் அப்படி என்ன தப்பு பண்ணிட்டாரு. அவரை கொஞ்சம் ஃப்ரீயா விடுங்க ப்ளீஸ் – ஹர்பஜன் சிங் வேண்டுகோள்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் ஒன்றாம் தேதி இந்தூரில் துவங்க உள்ளது. இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றுவதோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கும் முன்னேறும் என்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement