அவர் அப்படி என்ன தப்பு பண்ணிட்டாரு. அவரை கொஞ்சம் ஃப்ரீயா விடுங்க ப்ளீஸ் – ஹர்பஜன் சிங் வேண்டுகோள்

Harbhajan
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் எஞ்சியுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியையும் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ அதிகாரபூர்வமாக வெளியிட்டு விட்டது.

இந்நிலையில் இந்த அணியில் தொடர்ச்சியாக சொதப்பி வரும் கே.எல் ராகுலுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது அனைவரது மத்தியிலும் பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. ஏனெனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலுமே சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவரை வெளியேற்றிவிட்டு அவருக்கு பதிலாக நல்ல பார்மில் இருக்கும் மற்றொரு துவக்க வீரரான சுப்மன் கில்லுக்கு வாய்ப்பினை வழங்க வேண்டும் என்று பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

- Advertisement -

மேலும் கே.எல். ராகுல் குறித்து வெளிப்படையாகவே இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்து பேசியிருந்தனர். இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் டிராவிட் ஆகியோர் கட்டாயம் கே.எல் ராகுல் அடுத்து வரும் போட்டிகளில் பங்கேற்பார் என்று உறுதி அளித்துள்ளனர்.

இந்நிலையில் கே.எல் ராகுல் எவ்வித தவறையும் செய்யவில்லை என்றும் அவரை யாரும் அழுத்தத்திற்கு உள்ளாக்க வேண்டாம் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் : நாம் அனைவருமே கே.எல் ராகுல் பற்றி பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ளலாமே. ஏனெனில் அவர் எந்த ஒரு தவறையும் செய்யவில்லை. அவர் ஒரு டாப் பிளேயர்.

- Advertisement -

நிச்சயம் அவர் தன்னுடைய சிறப்பான ஆட்டத்திற்கு வெகு விரைவில் திரும்புவார். தற்போது அவருக்கு தேவை எல்லாம் சற்று தனிமை தான். அவரைப் பற்றி யாரும் பேசாமல் இருந்தாலே நிச்சயம் அவர் பார்முக்கு திரும்பி விடுவார் என்று நினைக்கிறேன். ஏனெனில் இந்திய அணிக்காக விளையாடி வரும் அவருக்கு மரியாதை அளிக்கும் வகையில் அவரின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க : ரொம்ப டயர்டா இருக்கு. நான் ஸ்லோவா தான் போடப்போறேன்னு – புலம்பிய பும்ராவிற்கு அறிவுரை கூறிய கோச்

இந்திய அணியில் தொடர்ச்சியாக சொதப்பி வரும் அவருக்கு ஏன் வாய்ப்பினை வழங்க வேண்டும் என்றும் அவருக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்று பலரும் கூறிவரும் வேளையில் தற்போது கே எல் ராகுலுக்கு ஆதரவாக ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ள இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement