- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அதுக்கு நான் பழைய ஆள் இல்ல.. என்னையே ஸ்லெட்ஜிங் செய்த இளம் ஜெய்ஸ்வால் பயமற்றவர்.. பாராட்டிய ஸ்டார்க்

ஆஸ்திரேலியா – இந்தியா கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. இதை அடுத்து அடிலெய்ட் நகரில் நவம்பர் 6ஆம் தேதி பகல் இரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா எதிர்கொள்கிறது.

முன்னதாக பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இளம் வீரர் ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டானார். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் தவறை திருத்திக் கொண்டு விளையாடிய அவர் 161 ரன்கள் குவித்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரம் மிட்சேல் ஸ்டார்க்கை அவர் சிறப்பாக எதிர்கொண்டார்.

- Advertisement -

ஜெய்ஸ்வால் அபாரம்:

அப்போது ஒரு பவுண்டரி அடித்த பின் “நீங்கள் மிகவும் மெதுவாக பந்து வீசுகிறீர்கள்” என்று அவரிடம் ஜெய்ஸ்வால் சொன்னது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ஏனெனில் 140 – 150 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய ஸ்டார்க் உலகின் பல டாப் பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுக்கும் பவுலராக அறியப்படுகிறார். ஆனாலும் அவரை நன்றாக எதிர்கொண்ட ஜெயஸ்வால் அப்படி ஸ்லெட்ஜிங் செய்தது பல முன்னாள் வீரர்களை ஆச்சரியப்படுத்தியது.

இந்நிலையில் இப்போதெல்லாம் ஸ்லெட்ஜ் செய்யும் எந்த பேட்ஸ்மேன்களுக்கும் தாம் பதிலடி கொடுப்பதில்லை என்று ஸ்டார்க் தெரிவித்துள்ளார். அதனால் ஜெய்ஸ்வாலுக்கு தாம் அந்த சமயத்தில் பெரிதாக எதுவும் பதிலளிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “உண்மையில் நான் மெதுவாக பந்து வீசினேன் என்று அவர் சொல்லி கேட்கவில்லை”

- Advertisement -

ஸ்டார்க் பாராட்டு:

“இப்போதெல்லாம் நான் எதிரணியிடம் அதிகம் எதுவும் சொல்லவில்லை. கடந்த காலங்களில் பதிலடி கொடுத்துள்ளேன். ஆனால் தற்போது அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஃபிளிக் ஷாட்டை அடித்த பின் அதே போல வீசிய மற்றொரு பந்தை அவர் தடுத்து நிறுத்தினார் என்று நினைக்கிறேன். அப்போது மீண்டும் உங்களின் ஃபிளிக் ஷாட் எங்கே என்று அவரிடம் சொன்னேன்”

இதையும் படிங்க: 4 ஓவர் வெறும் 6 ரன்ஸ் ஹாட்ரிக்.. ஆர்சிபி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய புவனேஸ்வர்.. அசத்தல் சாதனை

“அதற்கு என்னைப் பார்த்து அவர் சிரித்தார். நாங்கள் அப்படியே அதை விட்டு விட்டோம். தற்போது இந்தியாவுக்காக நிறைய கிரிக்கெட்டை வெற்றிகரமாக விளையாடும் அவரை முதல் போட்டியின் முதல் இன்னிங்சில் விரைவாக அவுட்டாக்கினோம். ஆனால் இரண்டாவது இன்னிங்சில் சூழ்நிலைகளுக்கு உட்பட்டு நன்றாக விளையாடிய அவருக்கு முழுமையான பாராட்டுக்கள். அவர் தற்போது உலக கிரிக்கெட்டில் ஒரு பயமற்ற இளம் வீரராக உருவாகி வருகிறார்” என்று கூறினார்.

- Advertisement -