- Advertisement -
ஐ.பி.எல்

மீண்டும் ஐ.பி.எல் தொடர் துவங்கினாலும் மிட்சல் ஸ்டார்க் விளையாட மாட்டாராம்.. காரணம் என்ன? – விவரம் இதோ

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியானது இதுவரை தாங்கள் விளையாடியுள்ள 11 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் 15 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. கடைசியாக பஞ்சாப் கிங்ஸ் அணியானது டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடந்த 8-ஆம் தேதி தரம்சாலா நகரில் பங்கேற்று விளையாடியது.

எஞ்சியுள்ள ஐ.பி.எல் தொடரில் மிட்சல் ஸ்டார்க் பங்கேற்க மாட்டார் :

அந்த போட்டியின் இடையே இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதட்டம் காரணமாக ஆட்டம் பாதியிலேயே தடைபட்டது. மேலும் அந்த போட்டிக்கு பிறகு ஐபிஎல் தொடரானது தற்காலிகமாக ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைக்கப்படுவதாகவும் பிசிசிஐ சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

அதனை தொடர்ந்து வரும் மே 15 அல்லது 16-ஆம் தேதி மீண்டும் இந்த ஐபிஎல் தொடர் துவங்க இருப்பதாகவும் அப்படி துவங்கும் போது டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டி மீண்டும் துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படி இந்த ஐபிஎல் தொடரானது மீண்டும் துவங்கினாலும் அதில் டெல்லி அணியை சேர்ந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் இடம்பெற வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் 11 கோடியே 75 லட்ச ரூபாய் என்கிற மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட மிட்சல் ஸ்டார்க் டெல்லி அணிக்காக மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அந்த அணி சார்பாக அதிக விக்கெட்டை வீழ்த்திய வீரராக திகழ்கிறார். இந்நிலையில் அவர் மீண்டும் ஐபிஎல் தொடர் துவங்கும் போது டெல்லி அணிக்காக விளையாடாமல் போகும் பட்சத்தில் அது அந்த அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

இப்படி மிட்சல் ஸ்டார்க் மீண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்காமல் தவறவிடுவதற்கான சில காரணங்கள் தற்போது வெளியாகி உள்ளன. அந்த வகையில் ஏற்கனவே இந்தியாவிலிருந்து மிட்சல் ஸ்டார்க் ஆஸ்திரேலியா திரும்பியுள்ள வேளையில் அடுத்ததாக அவர் ஜூன் 11-ஆம் தேதி நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட பயிற்சிகளை மேற்கொள்ளப் போகிறார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : அந்த ஒரு பந்தை சமாளிக்க முடியாம ஹீரோ கோலி ரிட்டையராகலாமா? முடிஞ்சா நிரூப்பிச்சு காட்டுங்க.. ஃகைப் அதிருப்தி

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற இருக்கும் வேளையில் அதற்கு முன்னதாக சரியான முறையில் தயாராக வேண்டும் என்பதற்காகவே மிட்சல் ஸ்டார்க் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -