- Advertisement -
இந்திய கிரிக்கெட்

மிட்சல் ஸ்டார்க்கா இது? இதுதாங்க டெஸ்ட் கிரிக்கெட்.. என்ன வேணும்னா நடக்கும் – பெர்த் டெஸ்ட் சுவாரசிய சம்பவம்

பெர்த் நகரில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது போட்டியின் இரண்டாவது நாளே சுவாரஸ்யமான கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. நேற்று நடைபெற்ற முதல்நாள் ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது :

முழுநேர பேட்ஸ்மேனாக மாறிய மிட்சல் ஸ்டார்க் :

ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் தங்களது முதல் இன்னிங்சில் 150 ரன்கள் மட்டுமே குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக நிதீஷ் குமார் ரெட்டி 41 ரன்களையும், ரிஷப் பண்ட் 37 ரன்களையும் குவித்தனர். அவர்களை தவிர்த்து துவக்க வீரரான கே.எல் ராகுல் 26 ரன்கள் குவித்திருந்தார்.

- Advertisement -

அதனைத்தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது போட்டியின் இரண்டாம் நாளான இன்று உணவு இடைவேளைக்கு முன்னதாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 104 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 46 ரன்கள் முன்னிலையுடன் போட்டியின் இரண்டாம் நாளான இன்று இந்திய அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியின் போது இரண்டு அணிகளின் பேட்ஸ்மேன்களுமே இந்த மைதானத்தில் விளையாடுவதில் சிரமத்தை சந்தித்திருந்த வேளையில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் செய்த சம்பவம் ஒன்று அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி ஒட்டுமொத்தமாக 49.4 ஓவர்களையும், ஆஸ்திரேலிய அணி 51.2 ஓவர்களையும் விளையாடி இருந்தன.

- Advertisement -

இதில் ஒரு பேட்ஸ்மனாக அதிக பந்துகளை சந்தித்த வீரர் என்ற பெருமையை ஸ்டார்க் பெற்றுள்ளார். இந்த போட்டியில் 112 பந்துகளை சந்தித்த அவர் இரண்டு பவுண்டரியுடன் 26 ரன்கள் குவித்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்து இருந்தார். இதில் குறிப்பிட வேண்டிய விடயம் யாதெனில் ஸ்டார்க்கை தவிர்த்து மற்ற எந்த ஒரு பேட்ஸ்மனும் இரு அணிகளிலுமே சேர்த்து 100 பந்துகளை கடக்கவில்லை.

இதையும் படிங்க : சி.எஸ்.கே என்னை எடுக்காம விட்டா அடுத்த நான் விளையாட ஆசைப்படும் அணி இதுதான் – துஷார் தேஷ்பாண்டே விருப்பம்

ஆனால் வேகப்பந்து வீச்சாளரான அவர் பேட்ஸ்மேன் போன்று நிலைத்து நின்று 112 பந்துகளை இந்த போட்டியில் சந்தித்துள்ள சுவாரஸ்யமான சம்பவம் நடைபெற்றுள்ளது. அதோடு இந்த போட்டியின் 33.2 வது ஓவரில் ஒன்பதாவது விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலிய அணியானது அதன் பிறகு கிட்டத்தட்ட 18 ஓவர்கள் கழித்து தான் கடைசி விக்கெட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -