- Advertisement -
உலக கிரிக்கெட்

டெஸ்ட் போட்டிகளில் இடதுகை பந்துவீச்சாளராக மாபெரும் சாதனையை சமன் செய்து அசத்திய – மிட்சல் ஸ்டார்க்

இங்கிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வந்த 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது இந்த தொடரை நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியிருந்தது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் நான்கு போட்டிகளின் முடிவிலேயே ஆஸ்திரேலிய அணி மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலையில் இருந்தது.

இடது கை பந்துவீச்சாளராக மிட்சல் ஸ்டார்க் நிகழ்த்திய சாதனை :

இவ்வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது சிட்னி மைதானத்தில் கடந்த ஜனவரி 3-ஆம் தேதி முதல் நடைபெற்றது. அந்த வகையில் நடைபெற்று வந்த இந்த போட்டி கடைசி நாளான இன்றுடன் முடிவுக்கு வந்தது.

- Advertisement -

இந்த போட்டியில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரையும் நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது ஆஸ்திரேலிய அணி சார்பாக விளையாடிய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் முதல் இன்னிங்ஸ்சின் போது 23 ஓவர்களை வீசி 93 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். அதேபோன்று இரண்டாவது இன்னிங்சில் 18.2 ஓவர்களை வீசியிருந்த அவர் 72 ரன்கள் விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

இப்படி இந்த போட்டியில் மொத்தமாக 5 விக்கெட்டுகளை எடுத்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இடது கை பந்துவீச்சாளராக மாபெரும் சாதனை ஒன்றினையும் சமன் செய்து அசத்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் :

இதையும் படிங்க : டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியை கடந்து எலைட் பட்டியலில் இணைந்து சாதனை நிகழ்த்திய – டிராவிஸ் ஹெட்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இடதுகை பந்துவீச்சாளராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக இலங்கை அணியை சேர்ந்த முன்னாள் வீரர் ரங்கனா ஹெராத் 433 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருந்தார். இந்நிலையில் அவரது இந்த சாதனையை இன்று மிட்சம் ஸ்டார்க் 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 433 விக்கெட்டுகளை எடுத்து அந்த சாதனையை சமன் செய்து அசத்தியுள்ளார்.

- Advertisement -