IND vs NZ : முதல் டி20 போட்டியில் நாங்கள் இந்திய அணியை வீழ்த்த இதுவே காரணம் – மிட்சல் சான்ட்னர் மகிழ்ச்சி

Santner
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணியானது அண்மையில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் இழந்தது. அதனை தொடர்ந்து நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது.

IND-vs-NZ

- Advertisement -

இந்நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற முடிந்த முதலாவது டி20 ஆட்டத்தில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியானது 6 விக்கெட் 176 ரன்கள் குவித்தது.

பின்னர் 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவு 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே குவித்ததால் 21 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Washington Sundar.jpeg

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த வெற்றி குறித்து பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்சல் சான்ட்னர் கூறுகையில் : இந்த போட்டியில் விளையாடும் போது மைதானம் செயல்பட்ட விதம் எங்களுக்கே சற்று அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் இரண்டாவது இன்னிங்ஸ்சின் போது பந்து முதல் இன்னிங்சை விட அதிக அளவில் ஸ்விங் ஆனது.

- Advertisement -

அதேபோன்று ஒருநாள் கிரிக்கெட்டிலும் இரண்டு அணிகளுமே நிறைய ரன்களை குவித்ததால் நிச்சயம் இந்த 170 ரன்கள் போதாது என்று நினைத்தேன். அதேபோன்று இறுதிக்கட்டத்தில் டேரல் மிட்சல் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களது அணியின் வெற்றிக்கு உதவினார்.

இதையும் படிங்க : ரவீந்திர ஜடேஜாவின் கம்பேக் தடையை தூளாக்கி தகர்த்தெறிந்த தமிழ்நாடு – கடைசி நாளில் வென்றது எப்படி

மேலும் பவர்பிளேவின் போது விக்கெட்டினை கொடுக்காமல் விளையாடியது நல்ல விடயமாக இருந்தது. அதேபோன்று இந்த மைதானத்தில் சேசிங் செய்வது எளிதாக இருக்கும் என்பதனால் நிச்சயம் நாங்களும் டாஸ் வென்றிருந்தால் முதலில் பந்துவீச்சினை தான் தேர்வு செய்திருப்போம் என மிட்சல் சான்ட்னர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement