- Advertisement -
இந்திய கிரிக்கெட்

300 ரன் அடிச்சா கூட பத்தாது.. இந்திய அணிக்கெதிரான தோல்வி குறித்து பேசிய – மிட்சல் சான்ட்னர்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று ராய்ப்பூர் நகரில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்திய அணிக்கு எதிரான தோல்வி குறித்து பேசிய : மிட்சல் சான்ட்னர்

ஏற்கனவே நாக்பூர் நகரில் நடைபெற்ற முதலாவது போட்டியில் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி இந்த போட்டியிலும் தங்களது வெற்றி நடையை தொடர்ந்தது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் குவித்தது.

- Advertisement -

பின்னர் 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 15.2 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 209 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து வருத்தம் தெரிவித்திருந்த நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்சல் சான்ட்னர் கூறியதாவது :

உண்மையிலேயே இந்திய அணிக்கு எதிராக 300 ரன்கள் குவித்தால் கூட பத்தாது போலிருக்கிறது. இந்தியா போன்ற ஒரு பலமான அணி அதுவும் பேட்டிங் ஆழமாக இருக்கும் அணிக்கு எதிராக நிறைய ரன்களை குவிக்க வேண்டியது அவசியம். அதனால் தான் முதல் பந்தில் இருந்தே நாங்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தோம்.

- Advertisement -

இதையும் படிங்க : இப்படி யாரும் விளையாடி நான் பாத்ததில்ல.. இஷான் கிஷனின் ஆட்டத்தை பாராட்டிய – சூரியகுமார் யாதவ்

ஆனாலும் இந்த இலக்கு பத்தாமல் போயுள்ளது. இந்திய அணியில் இருக்கும் வீரர்கள் அனைவருக்கும் சுதந்திரமாக விளையாட அறிவுறுத்தி இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஏனெனில் எந்த ஒரு பேட்ஸ்மேன் களமிறங்கினாலும் அதிரடியாக விளையாடுகிறார்கள். இவர்களுக்கு எதிராக நிச்சயம் 200-210 ரன்கள் எல்லாம் இனிமேல் போதாது என்று தான் நினைப்பதாக மிட்சல் சான்ட்னர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -