IND vs NZ : நாங்க மட்டும் அதை பண்ணியிருந்தா கண்டிப்பா ஜெயிச்சிருப்போம் – மிட்சல் சான்ட்னர் பேட்டி

Mitchell-Santner
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி ஏற்கனவே முடிவடைந்த வேளையில் அந்த போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியானது இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்திருந்தது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நேற்று லக்னோ மைதானத்தில் நடைபெற்று முடிந்தது.

IND-vs-NZ

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி மைதானத்தின் தன்மையை கணிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 99 ரன்களை மட்டுமே குவித்தனர். பின்னர் 100 ரன்கள் அடித்தால் வெற்றி என்று எளிய இலக்குடன் விளையாடிய இந்திய அணியும் மைதானத்தில் தன்மையை கணிக்க முடியாமல் திணறியது.

பின்னர் இறுதிவரை போராடி கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் போராடி வெற்றியை பெற்றது. இறுதியில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் குவித்த இந்திய அணியானது ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்சல் சான்ட்னர் கூறுகையில் :

Hardik Pandya

இந்த போட்டி இரண்டு அணிகளுக்குமே மிகச் சிறப்பான ஒன்றாக அமைந்தது. இறுதிவரை நாங்கள் மிகச் சிறப்பாக போராடியதாக உணர்கிறேன். அதிலும் குறிப்பாக எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் நல்ல முயற்சியை வெளிப்படுத்தி இருந்தனர். ஒருவேளை நாங்கள் இன்னும் 10 முதல் 15 ரன்கள் வரை கூடுதலாக எடுத்திருந்தால் இந்த போட்டியின் முடிவு மாறியிருக்கும்.

- Advertisement -

ஆனால் இறுதிவரை சூரியகுமார் யாதவ் மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடி வெற்றியைப் பெற்றுத் தந்தனர். இந்த போட்டியில் நாங்கள் 16 முதல் 17 ஓவர்கள் வரை ஸ்பின்னர்களை வைத்து வீசினோம். இந்த மைதானத்தில் நிச்சயம் சுழற்ப்பந்து வீச்சிக்கு சாதகமாக இருக்கும் என்பதை தெரிந்ததாலே அந்த முடிவினை நாங்கள் எடுத்தோம்.

இதையும் படிங்க : IND vs NZ : நாங்க ஜெயிச்சிருந்தாலும் இந்த விஷயம் எங்களுக்கு ரொம்ப ஷாக்கா இருந்துச்சி – ஹார்டிக் பாண்டியா வருத்தம்

இந்த மைதானத்தில் 120 ரன்கள் வரை நாங்கள் முதலில் குவித்திருந்தால் இந்த மைதானத்தில் அது நல்ல இலக்காக இருந்திருக்கும் என்று மிட்சல் சான்ட்னர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement