ஆஸ்திரேலிய கேப்டனுக்கு ஏற்பட்ட பாதிப்பு.. நிபந்தனையுடன் ஐ.பி.எல் விளையாட இருக்கும் மிட்சல் மார்ஷ் – என்ன ஆனது?

Mitchell Marsh
- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் பிரபல கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடரானது இதுவரை 17 சீசன்களை நிறைவு செய்துள்ள வேளையில் 2025-ஆம் ஆண்டிற்கான 18-வது சீசனானது எதிர்வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது பெங்களூரு அணிக்கெதிராக அதன் சொந்த மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த இருக்கிறது.

மிட்சல் மார்ஷ்க்கு ஏற்பட்டுள்ள நிலைமை :

மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரின் இறுதிப் போட்டி வரை சென்று கோப்பையை கைப்பற்றப்போவது யார்? என்கிற எதிர்பார்ப்பும் அனைவரையும் மத்தியிலும் எழுந்துள்ளது. மேலும் இந்த சீசனுக்கு முன்னதாக வீரர்களின் அணி மாற்றமும் நிகழ்ந்துள்ளதால் இந்த தொடரானது எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.

- Advertisement -

அதோடு அனைத்து அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகளாக தெரிவதால் எந்த அணியின் கை இந்த தொடரில் மேலோங்கி இருக்கப்போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்கான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த ஆஸ்திரேலிய டி20 அணியின் கேப்டனும், முன்னணி ஆல்ரவுண்டருமான மிட்சல் மார்ஷ் தற்போது ஒரு நிபந்தனையுடன் இந்த தொடரில் விளையாட இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது கடந்த ஜனவரி மாதம் அவருக்கு முதுகுப் பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அடுத்து சில மாதங்கள் எந்த தொடரிலுமே பங்கேற்க முடியாமல் போனது. அந்த வகையில் அண்மையில் நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை தவறவிட்ட அவர் கடந்த சில மாதங்களாக ஓய்வில் இருந்து வந்தார்.

- Advertisement -

இவ்வேளையில் ஐபிஎல் தொடரில் அவர் முழுநேர பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாட வேண்டும் என்றும் ஒருவேளை அவர் பந்து வீசினால் அவருக்கு மீண்டும் மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப இதுமட்டும் தான் ஒரேவழி.. மிகப்பெரிய வாய்ப்பை நோக்கி காத்திருக்கும் – இஷான் கிஷன்

இதன் காரணமாக அவர் 2025 ஐ.பி.எல் தொடரில் முழுநேர பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கு லக்னோ அணியின் நிர்வாகமும் அனுமதி வழங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்காரணமாக மிட்சல் மார்ஷ் இந்த ஆண்டு பெரும்பாலும் இம்பேக்ட் வீரராகவே களமிறங்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

Advertisement