6, 4, 6, 4, 4.. 2008 அண்ணன் போல ரசித் கானையே நொறுக்கிய மார்ஷ் அரிதான சாதனை.. குஜராத்தை பந்தாடிய லக்னோ

Mitchell Marsh 2
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 22ஆம் தேதி அகமதாபாத் நகரில் 64வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற குஜராத் ஏற்கனவே வெளியேறிய லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பௌலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய லக்னோவுக்கு மிட்சேல் மார்ஷ் அதிரடியாக விளையாடினார்.

அவருடன் சேர்ந்து 91 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் நல்ல துவக்கத்தைக் கொடுத்த ஐடன் மார்க்ரம் 36 (24) ரன்னில் சாய் கிசோர் சுழலில் சிக்கினார். ஆனால் இந்த பக்கம் அடித்து நொறுக்கிய மார்ஷ் அரை சதத்தை அடித்தார். குறிப்பாக உலகின் நம்பர் ஒன் டி20 ஸ்பின்னராக அறியப்படும் ரசித் கானுக்கு எதிராக 6, 4, 6, 4, 4, 1 என ஒரே ஓவரில் 25 ரன்களை தெறிக்க விட்ட அவர் சதத்தை நெருங்கினார்.

- Advertisement -

மார்ஷ் மிரட்டல்:

அவருடன் ஜோடி சேர்ந்த நிக்கோலஸ் பூரான் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். மறுபுறம் தொடர்ந்து அட்டகாசமாக பேட்டிங் செய்த மார்ஷ் 56 பந்துகளில் சதத்தை அடித்து லக்னோவை 200 ரன்கள் தாண்ட வைத்தார். அந்த வகையில் இரண்டாவது விக்கெட்டுக்கு 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடி லக்னோவை வலுப்படுத்தி பிரிந்தது.

இறுதியில் 10 பவுண்டரி 8 சிக்ஸர்களை பறக்க விட்ட மார்ஷ் 117 (64) ரன்கள் குவித்து அசத்தினார். கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் துவங்கப்பட்ட போது பஞ்சாப் அணிக்காக ஆஸ்திரேலியாவின் ஷான் மார்ஷ் ராஜஸ்தானுக்கு எதிராக 115 (69) ரன்கள் விளாசி சதத்தை அடித்தார் தற்போது. அவருடைய தம்பியான மிட்சேல் மார்ஷ் ஐபிஎல் தொடரில் சதத்தை அடித்துள்ளார்.

- Advertisement -

அரிதான சாதனை:

இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் சதத்தை – அடித்த முதல் இரட்டை சகோதரர்கள் என்ற அரிதான சாதனையை மார்ஷ் சகோதரர்கள் படைத்துள்ளார்கள். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் மறுபுறம் வெளுத்து வாங்கிய பூரான் அரை சதத்தை அடித்து அசத்தினார். இறுதியில் பூரான் 56* (27) ரன்கள், கேப்டன் ரிஷப் பண்ட் 16* (6) ரன்களை விளாசி நல்ல ஃபினிஷிங் கொடுத்தார்கள்.

இதையும் படிங்க: அடப்பாவிங்களா.. இபப்டியா பண்ணுவீங்க.. மோசமான சாதனைக்கு ஆளான டெல்லி கேபிட்டல்ஸ் – விவரம் இதோ

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் லக்னோ 235/2 ரன்களை அடித்து அசத்தியது. இதைத் தொடர்ந்து ஆறுதல் வெற்றியைப் பெறும் முனைப்புடன் லக்னோ பவுலிங் செய்கிறது. மறுபுறம் இப்போட்டியில் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்க வைக்கும் முனைப்புடன் குஜராத் பேட்டிங் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement