கடந்த ஆண்டு நடைபெற்ற 2024 ஐபிஎல் தொடருக்கு பின்னர் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் அந்த அணியில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து இந்த நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அக்சர் பட்டேல் தலைமையில் களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது இந்த தொடரின் ஆரம்பத்திலேயே அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வந்தது. இதன் காரணமாக பலரது மத்தியிலும் டெல்லி அணி பெரியளவில் கவனத்தை ஈர்த்திருந்தது.
மோசமான சாதனைக்கு ஆளான டெல்லி கேபிட்டல்ஸ் :
ஏனெனில் இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகளிலும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற அவர்கள் தொடர்ச்சியாக மேலும் வெற்றிகளை குவித்து இந்த தொடரில் அனைத்து அணிகளுக்கும் பெரிய தலைவலியாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் முதல் பாதி தொடருக்கு பின்னர் அந்த அணியின் காம்பினேஷனில் உள்ள குளறுபடிகளால் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து தற்போது அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பையே இழந்துள்ளது. கடைசியாக மே 21-ஆம் தேதி வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மிக முக்கியமான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய டெல்லி 59 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணியிடம் படுமோசமான தோல்வியை சந்தித்து இருந்தது.
இந்நிலையில் இப்படி இந்த ஆண்டு பிளே ஆப் வாய்ப்பை இழந்ததன் மூலம் மோசமான சாதனை ஒன்றுக்கும் டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஆளாகியுள்ளது. அந்த வகையில் அவர்கள் படைத்த மோசமான சாதனை யாதெனில் : இதுவரை எந்தவொரு அணியும் ஒரு ஐபிஎல் தொடரின் முதல் 4 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று அதன் பின்னர் பிளே ஆப் வாய்ப்பை தவறவிட்டதே கிடையாது.
ஆனால் இந்த தொடரின் முதல் நான்கு ஆட்டத்திலும் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற டெல்லி அணி அதன்பிறகு மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இந்த ஆண்டிற்கான பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளது. அதிலும் குறிப்பாக முதல் 6 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்ற அவர்கள் அதன்பின்னர் தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்துள்ளனர்.
இதையும் படிங்க : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து வெளியேறுகிறாரா ஜெய்ஸ்வால்? பதிவால் உண்டான குழப்பம் – விவரம் இதோ
டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு இந்த தொடரில் இன்னும் ஒரு லீக் ஆட்டம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக இருந்தாலும் அதில் வெற்றிபெற்றால் கூட அடுத்த சுற்றுக்கு தகுதி பெறமுடியாமல் போகும் பரிதாப நிலையுடன் அந்த அணி இந்த தொடரில் இருந்து வெளியேறவுள்ளது குறிப்பிடத்தக்கது.



