மிஸ் யூ சைமன்ஸ் ! மங்கிகேட், போதை சர்ச்சைகளும் சாதனைகளும் அடங்கிய வாழ்க்கை பயணம் – ஓர் முழுஅலசல்

Andrew Symonds Aus
- Advertisement -

ஆஸ்திரேலியாவை சேர்ந்த நட்சத்திர முன்னாள் ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மே 14-ஆம் தேதியன்று ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து நகரில் நிகழ்ந்த கார் விபத்தில் இயற்கை எய்தினார். தனது 46-வது வயதிலேயே இந்த உலகைவிட்டு திடீரென்று அவர் பிரிந்தது பல முன்னாள் ஜாம்பவான் வீரர்களையும் வல்லுனர்களையும் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சமீபத்தில்தான் மற்றொரு ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்னே 50 வயதிலேயே இயற்கை எய்தியதால் சோகத்தில் இருந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது மேலும் சோகத்தை கொடுத்துள்ளது.

symonds

- Advertisement -

கடந்த ஜூன் 9 1975-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் பிறந்த அவரின் குடும்பம் அதன்பின் ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்ததை தொடர்ந்து இளம் வயதில் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தலாக செயல்பட்டு ஆஸ்ட்ரேலியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் ஆண்ட்ரூ சைமன்ஸ் விளையாடினார். கடந்த 1998இல் முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 2004இல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் 2005இல் டி20 கிரிக்கெட்டிலும் அறிமுகமானார். தனது அதிரடியான பேட்டிங்கால் மிடில் ஆர்டரில் எதிரணிகளை அச்சுறுத்தும் பேட்ஸ்மேனாக வலம் வந்த அவர் பந்துவீச்சில் மெதுவாகவும் தேவைப்பட்டால் வேகமாகவும் வீசும் 2 திறமைகளையும் ஒரு சேரப் பெற்றவர்.

சாதனை – வாழ்க்கை பயணம்:
அதேபோல் மின்னல் வேகத்தில் பீல்டிங் செய்து ரன் அவுட் செய்வதில் கில்லாடியான அவருக்கு நிகராக ஒருசிலர் மட்டுமே அந்த சமயத்தில் இருந்தனர். அப்படிப்பட்ட தரமான அவரை இழந்துள்ளது கிரிக்கெட்டிற்கு ஒரு மிகப் பெரிய இழப்பு என்றே கூறலாம். இந்த சமயத்தில் அவரின் ஒருசில சாதனை மற்றும் வாழ்க்கை பயணங்களைப் பற்றி பார்ப்போம்.

1. 2003, 2007 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் உலக கோப்பையை வென்ற ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியின் துருப்புச் சீட்டாக செயல்பட்ட அவர் 18 போட்டிகளில் 515 ரன்களை 103.00 என்ற அபாரமான சராசரியில் எடுத்தார்.

- Advertisement -

2. அந்த வகையில் உலக கோப்பை வரலாற்றில் 100க்கும் மேற்பட்ட பேட்டிங் சராசரி கொண்ட ஒரே பேட்ஸ்மேனாக உலக சாதனை படைத்துள்ள அவர் பங்கேற்ற 18 உலக கோப்பை போட்டிகளிலும் ஒருமுறைகூட ஆஸ்திரேலியா தோற்றதே கிடையாது.

3. இப்படிபட்ட இவரை வயது மற்றும் உடல்தகுதி காரணமாக 2003 உலக கோப்பையின் போது பெரும்பாலான ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்களும் வல்லுநர்களும் வேண்டாம் என மறுத்தனர். ஆனால் தன்னுடைய அணியில் கண்டிப்பாக ஆன்ட்ரூ சைமன்ஸ் விளையாடியே தீர வேண்டும் என்று அப்போதைய கேப்டன் ரிக்கி பாண்டிங் கேட்டு வாங்கி வாய்ப்புக் கொடுத்தார். அதில் 326 ரன்களும் 2 விக்கெட்டுகளையும் எடுத்து கருப்பு குதிரையாக செயல்பட்ட சைமன்ஸ்க்கு மீண்டும் ரிக்கி பாண்டிங் 2007 உலகக் கோப்பையில் வாய்ப்பளித்தார்.

- Advertisement -

4. சைமன்ஸ் என்றாலே உதட்டில் வெள்ளை சாந்தும் நீளமான சுருட்டை முடிக்கும் புகழ்பெற்றவர். அந்த வகையில் கடந்த 2009இல் ஒரு அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் வகையில் தனது நீண்ட முடிகளை நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனமாக அளித்து அப்போது முதல் முடியற்ற தலையுடன் இருந்து வந்தார்.

5. இன்று உலகின் நம்பர்-1 தொடராக வலம் வரும் ஐபிஎல் தொடரில் 2008இல் எம்எஸ் தோனி, சச்சின், ராகுல் டிராவிட் போன்ற பல இந்திய வீரர்கள் பெரிய தொகைக்கு ஒப்பந்தமானார்கள். அந்த வகையில் 2008 ஐபிஎல் தொடரில் 5.40 கோடிக்கு டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஒப்பந்தமான அவர் முதல் ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு ஏலம் போன வெளிநாட்டு வீரர் என்ற சாதனை படைத்தார்.

- Advertisement -

அதன்பின் 2009 ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் அவர் ஆல் ரவுண்டராக துருப்புச் சீட்டாக செயல்பட்டார். மேலும் ஐபிஎல் வரலாற்றில் டக் அவுட்டாகாமல் அதிக ரன்கள் (974) அடித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

6. அதேபோல் இங்கிலாந்தின் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் 1995இல் முதன்முறையாக களமிறங்கிய அவர் 20 வயதில் க்ளூஸ்சேஸ்ஷைர் அணிக்காக 254 ரன்களை தெறிக்கவிட்டதுடன் 16 சிக்சர்களை விளாசினார். அதன் வாயிலாக கவுண்டிங் சாம்பியன்ஷிப் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்ஸர்கள் பறக்க விட்ட பேட்ஸ்மேன் என்று அவர் படைத்த சாதனையை 27 வருடங்கள் கழித்து கடந்த வாரம் பென் ஸ்டோக்ஸ் முறியடித்தார்.

7. அவரை ரிக்கி பாண்டிங் உட்பட சக வீரர்களும் பெரும்பாலான ரசிகர்களும் “ராய்” என்று பட்டப்பெயரை வைத்து கூப்பிடுகின்றனர். கூடைப்பந்து உலகை கலக்கிய ஆஸ்திரேலிய ஜாம்பவான் லாரி லாகின்ஸ்’சின் மிகப்பெரிய ரசிகராக சைமன்ஸ் இருப்பதாலேயே அவரை ராய் என்றே அனைவரும் அழைத்தனர்.

Harbhajan Symonds

8. இவ்வளவு பெருமைகளுக்கு சொந்தக்காரரான சைமன்ஸ் கடந்த 2008இல் இந்தியா ஆஸ்திரேலியா மோதிய பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் சிட்னி நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர் ஹர்பஜன் சிங்க்குடன் மோதலில் ஈடுபட்டார். அதாவது தம்மை குரங்கு என அழைத்ததாக குற்றம் சாட்டிய அவரால் ஹர்பஜன் சிங்குக்கு 3 போட்டிகள் தடை விதிக்கப்பட்டது.

இருப்பினும் பிசிசிஐ அதற்கு எதிராக இருந்ததால் அவர் தடையில் இருந்து தப்பினார். ஆனால் அந்த “மங்கிகேட்” சர்ச்சை இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய சர்ச்சையாக காலத்திற்கும் திகழ்கிறது. இருப்பினும் நாளடைவில் ஐபிஎல் தொடரில் அதை ஹர்பஜன்சிங் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் ஒன்று சேர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நண்பர்களாக விளையாடியதையும் மறக்க முடியாது.

Symonds

9. அதேபோல் 2009இல் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பையின் போது போதை உட்பட ஒழுக்கமின்றி நடந்து கொண்டதால் ஆரம்பத்திலேயே வெளியேற்றப்பட்டு சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதையும் படிங்க : நெருப்பின்றி புகையாது ! என்னதான் ஆச்சு நம்ம சிஎஸ்கேவுக்கு – ரசிகர்கள் சந்தேகம், வெளியான பகீர் ரிப்போர்ட்

10. அத்துடன் 2008இல் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது நடந்த ஆஸ்திரேலிய டீம் மீட்டிங்கை புறக்கணித்து விட்டு தமக்கு மிகவும் பிடித்த மீன் பிடிக்கும் வேலையை செய்வதற்கு சென்றுவிட்டார். அதனால் கடுப்பான கேப்டன் மைக்கேல் கிளார்க் கிரிக்கெட் வாரியத்துடன் பேசி அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

Advertisement