நம்பர் ஒன்னுன்னு நீங்க தான் மெச்சுக்கணும்.. பாகிஸ்தான் பற்றி நேரலையில் வாசிம் அக்ரமுக்கு.. மிஸ்பா பதிலடி

Misbhah Ul Haq
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. அதில் தங்களை எப்போதுமே புறக்கணித்து வரும் இந்திய மண்ணில் கோப்பையை வென்று சரித்திரம் படைப்பதற்காக பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியினர் தயாராக இருக்கின்றனர். சொல்லப்போனால் எல்லை பிரச்சினை காரணமாக 2016 டி20 உலகம் கோப்பையில் விளையாடிய அவர்கள் 7 வருடங்கள் கழித்து முதல் முறையாக இந்தியாவில் விளையாட உள்ளனர்.

இந்த சூழ்நிலையில் உலக அரங்கில் சிறந்த பவுலிங் கூட்டணியை கொண்டுள்ள பாகிஸ்தான் உலகக்கோப்பை வெல்வதற்கு நிறைய வாய்ப்புள்ளதாக சில முன்னாள் வீரர்களும் அந்நாட்டு ரசிகர்களும் கருதுகின்றனர். சொல்லப்போனால் 2023 ஆசிய கோப்பையில் இந்தியாவை தோற்கடித்து பாகிஸ்தான் வெற்றி வாகை சூடும் என்று முன்னாள் வீரர்கள் கணித்தனர். ஆனால் இந்தியாவிடம் வரலாறு காணாத அளவுக்கு படுதோல்வியை சந்தித்த அந்த அணி இலங்கையிடம் தோற்று ஃபைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது.

- Advertisement -

விளாசிய மிஸ்பா:
மேலும் நசீம் ஷா காயத்தை சந்தித்து வெளியேறியுள்ளது பின்னடைவாக பார்க்கப்படும் நிலையில் பேட்டிங்கில் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் தவிர்த்து ஏனைய வீரர்கள் சுமாராக செயல்படுகின்றனர். அதே போல முதன்மை ஸ்பின்னரான ஷடாப் கான் ஆசிய கோப்பையில் 1 விக்கெட் கூட எடுக்காமல் சுமாராக செயல்பட்டார். இது போக ஃபீல்டிங்கிலும் சொதப்பும் பாகிஸ்தான் 2023 உலகக்கோப்பை பயிற்சி போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது.

அந்த நிலைமையில் நேற்று நடைபெற்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ள பாகிஸ்தான் அணி குறைந்தபட்சம் கடந்த 6 மாதங்களாக ஐசிசி ஒருநாள் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருந்ததை பாராட்ட வேண்டும் என்று ஜாம்பவான் வாசிம் அக்ரம் ஆதரவு தெரிவித்தார். ஆனால் அதைத் துளியளவும் ஏற்றுக்கொள்ளாத மிஸ்பா-உல்-ஹக் கத்துக்குட்டிகளை அடித்து நம்பர் ஒன் இடத்தை பெற்றதில் பெருமையும் இல்லை என்று பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்து பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பாகிஸ்தானுக்கு வந்தன. அவர்கள் டாப் அணிகளாக இருந்தாலும் அவர்களுடைய சி மற்றும் டி அணிகள் தான் இங்கே வந்தன. அந்த அணிகளை எதிர்கொண்டு வென்றதால் தரவரிசையில் நம்முடைய ரேட்டிங் புள்ளிகள் அதிகரித்தன. அதைத்தொடர்ந்து வந்த வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக வென்ற நாம் நம்பர் ஒன் இடத்தை அடைந்ததற்காக மகிழ்ச்சியடைந்தோம். ஆனால் இருந்த உண்மையை நாம் உணர வேண்டும்”

இதையும் படிங்க: ஆல் ரவுண்டராக அசத்திய திலக் வர்மா முக்கிய சாதனை.. கிங் கோலியின் 8 வருட தனித்துவ சாதனையும் சமன்

“ஏனெனில் ஆஸ்திரேலிய சி அணி நமக்கு எதிராக ஒரு போட்டியில் வென்றது. அதே போல ஐபிஎல் தொடருக்கு முக்கியமான வீரர்கள் சென்று விட்டதால் நியூஸிலாந்து டி அணிக்கு எதிராகவே நாம் விளையாடினோம். அதாவது நம்முடைய டாப் பாகிஸ்தான் அணி 3வது தர எதிரணிகளை தான் எதிர்கொண்டது என்பதை உணர வேண்டும். ஆனாலும் அந்த எதிரணிகள் நமக்கு பெரிய சவாலை கொடுத்தன. எனவே நம்பர் ஒன் இடம் ஒரு விஷயமே கிடையாது” என்று கூறினார்.

Advertisement