பாகிஸ்தான் அதை செய்ய தயங்குவற்கு இந்தியா காட்டிய பயமே காரணம் – வாசிம் அக்ரம் கேள்விக்கு மிஸ்பா பதில், வீடியோ உள்ளே

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கியுள்ள 2022 டி20 உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக உலகின் 16 அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் கோப்பையை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் அக்டோபர் 23ஆம் தேதியன்று பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இவ்விரு அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டிகளில் எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்ற நிலையில் கடந்த 2007இல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பையை யாராலும் மறக்க முடியாது.

கைவிட்ட பாகிஸ்தான்:
குறிப்பாக அந்த தொடரின் லீக் போட்டி டையில் முடிந்ததால் வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக நடத்தப்பட்ட பவுல் அவுட் முறையில் இந்தியா வென்றதை போலவே மாபெரும் பைனலில் பாகிஸ்தான் தோற்றதை யாரும் மறுக்க முடியாது. ஏனெனில் ஜோகனஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் இந்தியா நிர்ணயித்த 156 ரன்களை துரத்தும் போது ஆரம்பம் முதலே தடுமாறிய பாகிஸ்தானுக்கு கடைசி நேரத்தில் போராடிய மிஸ்பா-உல்-ஹக் 4 சிக்சர்களை பறக்கவிட்டு 99.9% வெற்றியை உறுதி செய்தார்.

- Advertisement -

குறிப்பாக ஜோகிந்தர் சர்மா வீசிய கடைசி ஓவரின் 3வது பந்தில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட போது எளிதாக வெற்றி பெற வைத்து விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட அவர் தேவையின்றி ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட் அடித்தார். அது கேட்ச்சாக மாறி நேராக ஸ்ரீசாந்த் கைகளில் தஞ்சம் அடைந்ததால் யாருமே எதிர்பாராத வகையில் இந்தியா வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்த சமயத்தில் நல்ல பார்மில் இருந்த அவர் வேறு ஷாட் அடுத்திருந்தால் எளிதாக பாகிஸ்தான் வென்றிருக்கும். ஆனாலும் விதியை போல அந்த ஷாட்டை அடித்த அவர் மைதானத்திலேயே மனமுடைந்தது இப்போதும் அந்நாட்டவர்களால் மறக்க முடியாது.

இந்நிலையில் தற்போதைய நவீன கிரிக்கெட்டில்  உலகின் அனைத்து அணிகளிலும் உள்ள பேட்ஸ்மேன்கள் ரிவர்ஸ் ஸ்வீப், ரிவர்ஸ் லேப் என விதவிதமான புதிய ஷாட்டுகளை அடிக்கும் நிலையில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் மட்டும் அவ்வாறு ஏன் அடிப்பதில்லை என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் கேள்வி எழுப்பினார். அப்போது 2007 பைனலில் தாம் அடித்த அந்த ஷாட்டுக்கு பின் மொத்த பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களும் அது போன்ற புதுமையான ஷாட்களை அடிக்கும் முயற்சிகளை கைவிட்டு விட்டதாக அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற மிஸ்பா-உல்-ஹக் கூறினார்.

- Advertisement -

அதாவது சூடு பட்ட பூனை அடுப்பண்டை சேராது என்பது போல் வரலாற்று தோல்வியை கொடுத்த அந்த புதுமையான ஷாட் அடித்து தாங்களும் அவுட்டாகி விடுவோமோ என்ற அச்சத்தில் அடுத்த தலைமுறை பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அவ்வாறு அடிக்க முயற்சிப்பதில்லை என்று மிஸ்பா தெரிவித்தார். உலககோப்பையை முன்னிட்டு பிரபல பாகிஸ்தான் தொலைக்காட்சியில் சோயப் மாலிக் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் வாசிம் அக்ரம் பேசியது பின்வருமாறு.

“இது மில்லியன் டாலர் கேள்வி. அதிகப்படியான அனுபவம் கொண்டுள்ள உங்களுக்கு உங்களுடைய பலம், பலவீனம் தெரியும் என்பதை நான் புரிந்துள்ளேன். ஆனால் (பாகிஸ்தான்) கிரிக்கெட்டில் யாருமே ரிவர்ஸ் லேப், ரிவர்ஸ் ஸ்வீப் போன்ற புதுமையான ஷாட்டுகளை அடிப்பதில்லை. மாறாக மிட் ஆன், மிட் ஆஃப், ஸ்கொயர் லெக், மிட் விகெட் போன்ற பழமையான ஷாட்டுகளை அடிக்கின்றனர்” என்று மிஸ்பாவிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு மிஸ்பா. “2007 பைனலில் நான் அடித்த பின் அனைவரும் அதை விட்டுவிட்டார்கள்” என்று சிரித்துக் கொண்டே கூறினார். அதற்கு வாசிம் அக்ரம். “ஓ, இப்போது தான் எனக்கு நினைவுக்கு வருகிறது” என்று கூறினார். அதற்கு அன்றைய நாளில் அதை அடித்தது பற்றி மிஸ்பா மேலும் பேசியது பின்வருமாறு. “அந்த உலக கோப்பையில் நான் அடித்த 15 பவுண்டரிகளை யாருமே நினைவில் வைத்துக் கொள்ளவில்லை. மாறாக அந்த ஷாட்டை மக்கள் அனவரும் மறக்கவில்லை. ஆனால் என்னுடைய வாழ்வில் அந்த ஷாட்டை நான் எப்போதுமே தவற விட்டதில்லை. அப்போட்டியில் நேராக ஃபீல்டர்கள் இருந்ததால் அங்கே அடிக்கவில்லை. ஒருவேளை அப்போது ஸ்பின்னர் பந்து வீசியிருந்தால் ஃபைன் லெக் திசைக்கு மேலே அடித்திருப்பேன். ஆனால் அந்த ஷாட்’டில் என்னுடைய திட்டத்தை நான் தவறாக செயல்படுத்தி விட்டேன்” என்று கூறினார்.

Advertisement