2023-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை பைனலில் இந்த 2 அணிகள் தான் மோதும் – மிஸ்பா உல் ஹக் கருத்து

Misbah-ul-Haq
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் தோல்வியடைந்து நாடு திரும்பியுள்ளது. ஏற்கனவே கடந்த 2013-ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணி எந்த ஒரு ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை என்ற பேச்சு நிலவி வந்த வேளையில் இம்முறையும் கையில் கிடைத்த அருமையான வாய்ப்பை தவறவிட்டது.

Micthell Starc

- Advertisement -

இதன்காரணமாக இந்திய அணியின் மீது பெரிய அளவில் விமர்சனம் எழுந்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணி அடுத்ததாக இந்த ஆண்டு இறுதியில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

கடந்த 2011-ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது மீண்டும் இந்திய மண்ணில் இந்த 50 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறுவதால் இந்திய அணி வெற்றி பெற அதிக சாதகம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதே போன்று கடந்த 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் சிறப்பாகவே விளையாடிய இந்திய அணி இம்முறை கட்டாயம் கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

INDvsPAK-1

அதனால் ஐபிஎல் தொடர் முடிந்த முடிவடைந்த கையோடு அடுத்த சில மாதங்களில் துவங்க இருக்கும் இந்த 50 ஓவர் உலகக் கோப்பை குறித்த பேச்சுக்கள் தற்போதே எழ ஆரம்பித்துவிட்டன. அந்த வகையில் ஏற்கனவே முன்னாள் வீரர்கள் பலரும் இந்த எதிர்வரும் 50 ஓவர் உலக கோப்பையில் எந்தெந்த அணி சிறப்பாக செயல்படும் என்று பேசி வருகின்றனர்.

- Advertisement -

இவ்வேளையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான மிஸ்பா உல் ஹக் இந்த 2023-ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான இறுதிப் போட்டியில் எந்த இரு அணிகள் மோதும் என்பது குறித்த தனது கருத்தினை அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

இதையும் படிங்க : நீங்க விளையாடியது போதும், பேசமா அதையே செய்ங்க – வெ.இ தொடரில் ரோஹித்துக்கு பிசிசிஐ செக் வைத்த ரிப்போர்ட் இதோ

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகள் தான் 2023-ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான இறுதிப் போட்டியில் மோதும் என சந்தேகமின்றி தெரிவித்துள்ளார். இருப்பினும் பாகிஸ்தான் அணி இந்தியா வந்து இந்த தொடரில் பங்கேற்குமா? பங்கேற்காதா? என்று அனைவரும் சந்தேகித்து வரும் வேளையில் அவர் இப்படி ஒரு பதிலை கூறியுள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement