டோக்கியோ ஒலிம்பிக் : வெள்ளி பதக்கம் வென்ற மீராபாய் தங்கம் வெல்ல வாய்ப்பு – வெளியான செய்தி

Meera
- Advertisement -

உலகெங்கும் பரவி வரும் கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தடைபட்ட நிலையில் தற்போது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பலத்த பாதுகாப்புடன் 32வது ஒலிம்பிக் தொடரானது துவங்கியுள்ளது. இந்த ஒலிம்பிக்கில் எந்தெந்த நாடுகள் எத்தனை பதக்கம் வெல்லும் ? இந்திய அணிக்கு எத்தனை பதக்கம் கிடைக்கும் ? என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.

mirabai 1

- Advertisement -

இந்நிலையில் இந்தியா சார்பாக 127 வீரர்கள் 18 வகையான போட்டிகளில் கலந்து உள்ளனர். இதில் இந்தியாவிற்கு முதல் பதக்கமாக பளு தூக்குதல் பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு 49 கிலோ பிரிவில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தார். இறுதிப் போட்டியிலும் சிறப்பாக செயல்பட்ட அவர் ஸ்னாட்ச் பிரிவில் 87 கிலோ, ஜெர்க் முறையில் 115 கிலோவையும் தூக்கி வெள்ளிப்பதக்கம் பெற்று அசத்தி இருந்தார்.

இதற்கு முன்னர் பளு தூக்கும் பிரிவில் இந்திய வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி வெண்கலப் பதக்கம் பெற்றிருந்த வேளையில் தற்போது இவர் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இந்நிலையில் இவரது வெள்ளிப்பதக்கம் தற்போது தங்கப்பதக்கம் ஆக மாற வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வாய்ப்பு எப்படியெனில் இந்த இறுதிப் போட்டியில் பளு தூக்கி தங்கப்பதக்கம் வென்ற சீனா வீராங்கனை ஊக்க மருந்து சோதனை சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளார்.

mirabai

இதனால் அவர் சீனா திரும்பாமல் தற்போது ஜப்பானிலேயே தங்கியிருக்கிறார். இதன் காரணமாக அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டறியப்பட்டால் நிச்சயம் அவரது தங்கப்பதக்கம் பறிக்கப்படும் என்று தெரிகிறது. இதன் காரணமாக இரண்டாம் இடம் பிடித்த மீராபாய்க்கு தங்கப்பதக்கம் கிடைக்க வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement