ரசிகர்களை கைதட்டி பாராட்ட வைத்த ரஜத் படிதார் ! ஆர்சிபியின் வெற்றி நாயகனாக படைத்த 8 சாதனை பட்டியல் இதோ

Rajat Patidar 112
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்து பிளே ஆப் சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மே 25-ஆம் தேதி நடைபெற்ற முக்கியமான எலிமினேட்டர் போட்டியில் புள்ளி பட்டியலில் 3, 4 ஆகிய இடங்களைப் பிடித்த லக்னோ மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. உலகப் புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மழையால் 8.10 மணிக்கு தாமதமாக துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்களூருவுக்கு முதல் ஓவரிலேயே கேப்டன் டுப்லஸ்ஸிஸ் கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

patidar 1

- Advertisement -

அடுத்து களமிறங்கிய இளம் வீரர் ரஜத் படிதார் அதிரடி காட்ட அவருக்கு உறுதுணையாக பேட்டிங் செய்யாத விராட் கோலி 25 (24) ரன்களில் அவுட்டானார். அடுத்த ஒருசில ஓவர்களில் கிளன் மேக்ஸ்வெல் 9 (10) ரன்களிலும் மஹிபால் லோம்ரோர் 14 (9) ரன்களிலும் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர். அதனால் 115/4 என தடுமாறிய அந்த அணிக்கு மறுபுறம் அட்டகாசமாக பேட்டிங் செய்த ரஜத் படிடார் அரைசதம் கடந்து கடைசி நேரத்தில் லக்னோ பவுலர்களை சரமாரியாக பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக வெளுத்து வாங்கினார்.

தொடர்ந்து அபாரமாக பேட்டிங் செய்த அவர் கடைசி வரை அவுட்டாகாமல் 12 பவுண்டரி 7 சிக்சருடன் சதமடித்து 112* (54) ரன்கள் எடுக்க அவருடன் கடைசி நேரத்தில் பட்டையை கிளப்பிய தினேஷ் கார்த்திக் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 37* (23) ரன்கள் எடுத்து சூப்பர் பினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் பெங்களூரில் 207/4 ரன்கள் எடுத்தது.

Mohammed Siraj De Kock

பெங்களூரு வெற்றி:
அதை தொடர்ந்து 208 என்ற கடினமான இலக்கை துரத்திய லக்னோவுக்கு முதல் ஓவரிலேயே குயின்டன் டி காக் 6 (5) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளிக்க அடுத்து வந்த மன்னன் வோஹ்ரா அதிரடியாக 19 (11) ரன்கள் எடுத்தாலும் திடீரென அவுட்டாகி சென்றார். அதனால் 41/2 என தடுமாற்றமான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு மறுபுறம் நங்கூரமாக நின்ற மற்றொரு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் கேஎல் ராகுல் பொறுப்பாக பேட்டிங்க செய்தார். அவருடன் ஜோடி சேர்ந்த தீபக் ஹூடா 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல நிலைமையை எட்ட வைத்தபோது 1 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 45 (6) ரன்களில் 15-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இருப்பினும் கடைசி நேரத்தில் அசத்தலாக பந்துவீசிய பெங்களுரு 3 பவுண்டரி 5 சிக்சருடன் 79 (58) ரன்கள் எடுத்த ராகுலை அவுட் செய்து மார்கஸ் ஸ்டோனிஸ் 9 (9) க்ருனால் பாண்டியா 0 (1) ஆகியோரை அடுத்தடுத்து ஆட்டமிழக்க செய்ததால் 20 ஓவர்களில் 193/6 ரன்கள் மட்டுமே எடுத்த லக்னோ 14 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்று ஐபிஎல் 2022 தொடருடன் பரிதாபமாக வெளியேறியது. மறுபுறம் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் சூப்பராக செயல்பட்ட பெங்களூரு மே 27இல் நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் ராஜஸ்தானுடன் மோதி பைனலுக்கு செல்ல தயாராகி உள்ளது.

Patidar

ரஜத் சாதனைகள்:
இப்போட்டியில் டுப்லஸ்ஸிஸ், விராட் கோலி, கிளன் மேக்ஸ்வெல் போன்ற நட்சத்திரங்கள் தடுமாறிய நிலையில் தனி ஒருவனை போல லக்னோவை சொல்லி அடித்து சதமடித்த இளம் வீரர் ரஜத் படிடார் ஒட்டுமொத்த ஜாம்பவான்கள் மற்றும் ரசிகர்களின் கைதட்டல்களை அள்ளினார். பெங்களூருவின் இந்த வெற்றிக்கு சதமடித்து ஆட்டநாயகன் விருதை வென்ற அவர் இப்போட்டியில் படைத்த சாதனைகளின் பட்டியல் இதோ:

- Advertisement -

1. ஐபிஎல் வரலாற்றில் தோல்வியடைந்தால் வெளியேறவேண்டும் என்ற எலிமினேட்டர் போட்டியில் சதம் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற மாபெரும் சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன் வீரேந்திர சேவாக் என யாருமே எலிமினேட்டரில் சதம் அடித்தது கிடையாது.

2. அதேபோல் ஐபிஎல் வரலாற்றில் பிளே ஆப் சுற்றில் சதமடித்த முதல் பெங்களூர் பேட்ஸ்மேன் என்ற சரித்திரம் படைத்தார். இதற்கு முன் விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ் போன்றவர்கள் கூட சதமடித்தது கிடையாது.

- Advertisement -

3. மேலும் பிளே ஆப் போட்டிகளில் சதமடித்த முதல் சர்வதேச போட்டிகளில் விளையாடாத பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்தார். முந்தைய அதிகபட்ச ஸ்கோர் : மனிஷ் பாண்டே, 94 (50), கொல்கத்தாவுக்கு எதிராக, 2014

4. பிளே ஆஃப் போட்டிகளில் சதமடித்த 5-வது பேட்ஸ்மேன் என்ற பெருமையை முரளிவிஜய் (2012), வீரேந்திர சேவாக் (2014), ரித்திமான சஹா (2014), ஷேன் வாட்சன் (2018) ஆகியோருக்கு பின் பெற்றார்.

5. மேலும் 49 பந்துகளில் சதமடித்த அவர் ப்ளே ஆஃப் போட்டிகளில் அதிவேகமாக சதமடித்த பேட்ஸ்மேன் என்ற ரிதிமான் சகாவின் (49 பந்துகள், 2014 பைனல்) சாதனையையும் சமன் செய்தார்.

6. பிளே ஆஃப் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர் எடுத்த பெங்களூரு பேட்ஸ்மென் என்ற புதிய சாதனை படைத்தார். அந்த விவரம்:
1. ரஜத் படிடார் : 112*, 2022*
2. கிறிஸ் கெயில் : 89 (47), மும்பைக்கு எதிராக, 2011

7. இந்த வருட ஐபிஎல் 2022 தொடரில் சதம் அடித்த முதல் சர்வதேச போட்டிகளில் விளையாடாத பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் பெற்றார்.

இதையும் படிங்க : அவரோட ஓவரை அடிச்சி நொறுக்கியதுமே எனக்கு நம்பிக்கை வந்துடுச்சி. சதம் விளாசியது பற்றி பேசிய – ரஜத் பட்டிதார்

8. ஐபிஎல் 2021 தொடரில் கேஎல் ராகுல், ஜோஸ் பட்லர் ஆகியோரை விட அதிவேகமாக சதமடித்த பேட்ஸ்மேன் (49 பந்துகள்) என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

Advertisement