நீரஜ் சோப்ராவுக்கு ஒருகோடி பரிசு மட்டுமில்லாமல் ஒரு ஜெர்சியையும் வழங்கும் சி.எஸ்.கே – எதற்கு தெரியுமா ?

neeraj
- Advertisement -

டோக்கியோவில் நடைபெற்று வரும் நடப்பு ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி சார்பாக கலந்து கொண்ட வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகின்றனர். அதிலும் தற்போது ராணுவத்தில் இளநிலை அதிகாரியாக உள்ள நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் சிறப்பாக செயல்பட்டு இறுதிச்சுற்று வரை முன்னேறி தற்போது இறுதி போட்டியிலும் வெற்றி பெற்று இந்தியாவுக்காக முதல் தங்கத்தையும் பெற்று தந்துள்ளார்.

neeraj 1

- Advertisement -

இதன் காரணமாக அவருக்கு இந்தியா முழுவதிலுமிருந்து பிரதமர், முதல்வர், ஜனாதிபதி, காவல் அதிகாரிகள், பல தலைவர்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகள், திரைத்துறையினர், விளையாட்டுத் துறையினர் என அனைத்து தரப்பிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அதுமட்டுமின்றி இந்திய மக்களாலும் தற்போது நீரஜ் சோப்ரா வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் இந்தியாவிற்காக தங்கத்தை வாங்கிக் கொடுத்து பெருமை சேர்த்த நீரஜ் சோப்ராவை பெருமைப்படுத்தும் வகையில் ஐபிஎல் அணியான சிஎஸ்கே ஒரு கோடி ரூபாய் பரிசு தொகையை அறிவித்து அவரது சாதனைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

neeraj 2

மேலும் நீரஜ் சோப்ராவுக்கு சிஎஸ்கே அணியின் சீருடையில் 8758 என்ற எண்ணுடன் பதியப்பட்டு ஒரு சீருடையையும் வழங்குவோம் என்றும் சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது. அப்படி சி.எஸ்.கே ஜெர்சியில் 8758 என்ற எண் பாதிக்கப்பட காரணம் யாதெனில் : இறுதிச்சுற்று அவர் ஈட்டி எறிதலில் வீசிய தூரம் 87.58 மீட்டர்.

அதனைக் குறிக்கும் வகையில்தான் 8758 என்ற எண்ணில் சிஎஸ்கே அணி தங்களது ஜெர்சியை வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி நீரஜ் சோப்ராவிற்கு பிசிசிஐ-யும் ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement