மீராபாய் சானுவை தொடர்ந்து இந்தியாவிற்காக அடுத்த பதக்கத்தை வெல்ல காத்திருக்கும் வீராங்கனை – விவரம் இதோ

Lovlina
- Advertisement -

உலகெங்கும் பரவி வரும் கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தடைபட்ட நிலையில் தற்போது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பலத்த பாதுகாப்புடன் 32வது ஒலிம்பிக் தொடரானது துவங்கியுள்ளது. இந்த ஒலிம்பிக்கில் எந்தெந்த நாடுகள் எத்தனை பதக்கம் வெல்லும் ? இந்திய அணிக்கு எத்தனை பதக்கம் கிடைக்கும் ? என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.

mirabai

- Advertisement -

இந்நிலையில் இந்தியா சார்பாக 127 வீரர்கள் 18 வகையான போட்டிகளில் கலந்து உள்ளனர். இதில் இந்தியாவிற்கு முதல் பதக்கமாக பளு தூக்குதல் பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தி இருந்தார். அவரைத் தொடர்ந்து தற்போது மற்றொரு வீராங்கனையான இந்தியாவைச் சேர்ந்த லவ்லினா பதக்கம் வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் 69 கிலோ எடைப்பிரிவில் குத்துச்சண்டை போட்டியில் காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஒலிம்பிக் குத்துச்சண்டை 69 கிலோ எடைப் பிரிவில் நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போட்டியில் ஜெர்மனி நாட்டு வீராங்கனை எதிர்த்து விளையாடிய அவர் மூன்றுக்கு இரண்டு என்ற புள்ளி கணக்கில் ஜெர்மனி வீராங்கனையை வீழ்த்தியுள்ளார்.

Lovlina 1

இந்த வெற்றியின் மோளம் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்த காலிறுதி சுற்றில் அவர் வெற்றி பெறும் பட்சத்தில் நிச்சயம் தங்கம், வெள்ளி, வெண்கலம் இதில் ஏதாவது ஒரு பதக்கம் வெல்லும் வாய்ப்பு வாய்ப்பை உறுதி செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

lovlina 2

அதனால் அடுத்த ஒரு போட்டியில் அவர் வெற்றி பெறும் பட்சத்தில் நிச்சயம் இந்தியாவிற்கு அடுத்து பதக்கம் வரும் என்பது உறுதியாகி உள்ளது.

Advertisement