எல்லாம் தெரிஞ்ச சச்சின். இதனை செய்து இருக்கலாம். நேரடியாக சச்சினை சீண்டிய – மத்திய அமைச்சர்

Sachin-2
- Advertisement -

இந்திய அணியின் ஜாம்பவான் பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கருக்கு ஐசிசி நேற்று ஹால் ஆப் பேம் என்ற கௌரவத்தை வழங்கி சிறப்பித்தது. இந்தியா சார்பில் சச்சின் 6ஆவது வீரராக இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

sachin 1

- Advertisement -

இவருக்கு முன்பாக கவாஸ்கர், கபில்தேவ், பிஷன் சிங் பேடி, கும்ப்ளே மற்றும் டிராவிட் ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். சச்சின் அடைந்த இந்த கௌரவத்திற்கு விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில் சச்சினுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் ஹால் ஆப் பேம் பட்டியலில் இடம் பெற்றதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் சாதனைகள் இளம் வீரர்களுக்கு வழிகாட்டுதலாக இருக்கும். எனினும் நீங்கள் இது போன்று உங்களது மாநிலங்களவை பதவி காலத்தில் விவாதத்தில் பங்கேற்று இருந்தால் அந்தப் பதவியும் சிறப்பாக அமைந்திருக்கும் மேலும் நீங்கள் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதில் கவனமாக இருந்தால் அந்த உரையை இந்தியாவில் கவனித்து இருக்கும் என பதிவிட்டுள்ளார்.

sachin mp

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் 2012ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை எம்பி ஆகப் பதவி வகித்தார். இந்த காலகட்டத்தில் நாட்டிலேயே குறைவான நாட்கள் அவைக்குச் சென்று எம்பியாக சச்சின் இருந்தார். அதாவது ஆறு கால ஆண்டுகளில் 8 சதவீத நாட்கள் மட்டுமே அவர் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை குறிவைத்து இணை அமைச்சர் அப்படி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement