அடுத்த 10 வவருஷத்துக்கு இந்திய அணியில் இவர் ராஜ்ஜியம் தான் – இளம் வீரரை புகழ்ந்த மைக்கல் ஹசி

Hussey
- Advertisement -

இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி வெறும் 36 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தால் ஆஸ்திரேலிய அணியிடம் பரிதாப தோல்வி அடைந்தது. இதன் பிறகு தற்போது நடைபெற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரகானே, ரவீந்திர ஜடேஜா, சுப்மன்கில், அஸ்வின் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

Siraj-3

- Advertisement -

இதில் ரகானே தனது 12 டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்துள்ளார். இரண்டாவது இன்னிங்சில் இந்திய பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை அழுத்தத்துடன் கொண்டு சென்றதால் இந்திய அணிக்கு 70 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சிறிய இலக்கு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு தனது வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றி குறித்து ரகானேவிற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

அதுமட்டுமின்றி சுப்மன் கில் மற்றும் முகமது சிராஜ் ஆகிய இருவருக்கும் பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்கிறது. இந்திய அணியின் கடுமையான முயற்சி தான் இந்த வெற்றிக்கு காரணம் என்று கூறப்பட்டுகிறது. 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சார்பாக களமிறங்கிய சுப்மன் கில் முதல் இன்னிங்ஸில் 45 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 35 ரன்களும் குவித்தார். இதுவே அவரது முதல்டெஸ்ட் அறிமுக போட்டியாகும்.

Gill 2

தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதால் இவரை முன்னாள் வீரர்கள் அனைவரும் புகழ்ந்து வருகின்றனர். தற்போது இதுபற்றி ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹசி பேசியுள்ளார். அப்போது பேசிய அவர் : “சுப்மன் கில் தனது முதல் ஆட்டத்திலேயே சிறப்பாக விளையாடி உள்ளார். 2வது டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை வழங்கினார்.

Gill-1

அவ்ருடைய முதல்தர கிரிக்கெட் அனுபவத்தை சரியாக இந்த போட்டியில் பயன்படுத்தி இருக்கிறார். நிச்சயம் அவர் தொடர்ந்து இதேபோன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது. இவருக்கு இந்திய அணியில் மிகப் பெரிய எதிர்காலம் காத்துக்கொண்டிருக்கிறது” என்று மைக்கேல் ஹசி தெரிவித்துள்ளார்.

Advertisement