அந்த விடயம் நடைபெற்றபோது தோனி கண்கலங்கிய படி பேசினாரு – மைக்கல் ஹஸ்ஸி வெளியிட்ட தகவல்

Hussey
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஐபிஎல் தொடரானது தற்போது 15 வது சீசனாக வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடர்களில் எத்தனையோ அணிகள் இடம் பெற்றுள்ளன. அதில் எத்தனையோ கேப்டன்கள் இருந்து வருகின்றனர். ஆனால் சென்னை அணியை பொறுத்தவரை ஒரே கேப்டனாக தோனி மட்டுமே இன்றுவரை செயல்பட்டு வருகிறார். இடையில் சுரேஷ் ரெய்னா மற்றும் ஜடேஜா ஆகியோர் சென்னை அணியின் கேப்டனாக இருந்தாலும் இன்றளவும் சென்னை அணியின் கேப்டன் என்றால் ரசிகர்களின் மனதிற்கு முதலில் வரும் பெயர் தோனி தான்.

cskvsrcb

- Advertisement -

அந்த அளவிற்கு சென்னை அணியை மிகச் சிறப்பாக வழிநடத்தி இதுவரை 4 முறை கோப்பையை கைப்பற்றி கொடுத்துள்ளார். அதோடு நடப்பு சாம்பியனாகவும் திகழும் சென்னை அணி இன்றளவும் மிகப்பெரிய ஜாம்பவான் அணியாகவே ஐபிஎல் வரலாற்றில் பார்க்கப்படுகிறது. ஆனால் நடைபெற்று வரும் இந்த பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது சென்னை அணிக்கு அவ்வளவு குதூகலமாக இல்லை.

இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 10 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள சென்னை அணியானது இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் கூட 14 புள்ளியை தான் பெற முடியும். இதன் காரணமாக இந்த ஆண்டு நிச்சயம் பிளே ஆப் சுற்றுக்கு சென்னை அணி செல்லாது. அதன் காரணமாக 2020 ஆம் ஆண்டிற்குப் பிறகு தற்போது இந்த ஆண்டும் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறவுள்ளது.

Dhoni

இந்நிலையில் சென்னை அணியின் முன்னாள் வீரர்கள், பயிற்சியாளர்கள் என பலரும் சிஎஸ்கே அணியில் தங்களது அனுபவம் குறித்து பல்வேறு கருத்துக்களை சமூக வலைதளம் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் மைக்கல் ஹஸ்ஸியும் தோனி குறித்த ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : தோனி 2018 ஆம் ஆண்டு சென்னை அணி மீண்டும் ஐ.பி.எல் தொடருக்கு திரும்பியபோது கண் கலங்கியபடி வீரர்களிடம் பேசினார். ஏனெனில் அதற்கு முன்னதாக இரண்டு ஆண்டுகள் சென்னை அணி தடை செய்யப்பட்ட பிறகு மீண்டும் ஐபிஎல் தொடருக்கு திரும்பியதன் காரணமாக வீரர்களை ஊக்குவிக்கும் படி பேச வந்து தோனி கண்கலங்கியபடி பல விடயங்களை பேசினார்.

இதையும் படிங்க : பேசாம ஓய்வு எடுங்க, எங்களால பார்க்க முடில ! விராட் கோலியை விளாசும் ரசிகர்கள் – என்ன நடந்தது?

அந்த வருடம் நாங்கள் சாம்பியன் பட்டத்தை வென்றது மறக்க முடியாத தருணம். அந்த சீசன் முழுவதுமே தோனி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என மைக்கல் ஹஸ்ஸி கூறியிருந்தார். ஐ.பி.எல் ஏற்பட்ட சூதாட்ட புகார் காரணமாக சென்னை அணி 2 ஆண்டுகள்(2016,2017) தடை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement