பேசாம ஓய்வு எடுங்க, எங்களால பார்க்க முடில ! விராட் கோலியை விளாசும் ரசிகர்கள் – என்ன நடந்தது?

Virat Kohli Golden Duck
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்று 50 போட்டிகளை கடந்துள்ள நிலையில் மே 8-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடந்த 2 போட்டிகளில் மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற 54-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் சந்தித்தன. புகழ்பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை தொடர்ந்து அந்த அணிக்கு தொடக்க வீரர்களாக வழக்கம்போல கேப்டன் டுப்லஸ்ஸிஸ் மற்றும் விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர்.

Virat Kohli

- Advertisement -

இதில் நட்சத்திர வீரர் விராட் கோலி ஏற்கனவே பார்மின்றி தவிக்கிறார் என்பதையும் சுழல் பந்து வீச்சுக்கு எதிராக குறிப்பாக சென்னைக்கு எதிரான போட்டியில் மொய்ன் அலி வீசிய பந்தில் கிளீன் போல்ட்டானர் என்பதையும் சரியாக கணித்த ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் முதல் ஓவரை வேகப்பந்து வீச்சாளருக்கு வழங்காமல் சுழல்பந்து வீச்சாளர் ஜகதீசா சுசித்திடம் வழங்கினார். எதிர்பார்த்தது போலவே முதல் ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடிக்க முயன்ற விராட் கோலி ஷார்ட் மிட் விக்கெட் திசையில் நின்று கொண்டிருந்த வில்லியம்சனிடம் விரித்த வலையில் சிக்கியது போல் கேட்ச் கொடுத்து கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

3-வது டக்:
இன்றைய போட்டியில் ஸ்பெஷலான பச்சை நிற ஜெர்ஸியை அணிந்து விளையாடிய விராட் கோலி பெரிய ஸ்கோர் அடிப்பார் என அவரின் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் இப்படி போட்டியின் முதல் பந்திலேயே டக் அவுட்டானது மாபெரும் அதிர்ச்சியாக அமைந்தது. ஆனால் அவரோ வழக்கம் போல ஃபார்முக்கு திரும்பாமல் மீண்டும் கோல்டன் டக் அவுட்டாகி தலையை தொங்கப்போட்டுக் கொண்டே பெவிலியனுக்கு சென்று வலி நிறைந்த சிரித்த முகத்துடன் ஏமாற்றத்துடன் அமர்ந்திருந்தார்.

kohli 1

ஏற்கனவே இந்த வருடம் லக்னோ மற்றும் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிகளில் அடுத்தடுத்து வரலாற்றிலேயே முதல் முறையாக கோல்டன் டக் அவுட்டான அவர் தற்போது 3-வது முறையாக கோல்டன் டக் அவுட்டாகி உள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்துள்ள அவர் 6499* ரன்கள் எடுத்துள்ள நிலையில் இன்றைய போட்டியில் 6500 ரன்கள் எடுத்து சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ வரலாற்றில் முதல் முறையாக ஒரே சீசனில் 3 முறை கோல்டன் டக் அவுட்டாகி பரிதாப சாதனை படைத்தார்.

- Advertisement -

ஓய்வு பெறுங்க:
கடந்த 2019க்கு பின்பு டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என 105* போட்டிகளாக கடந்த 3 வருடங்களாக சதம் அடிக்க முடியாமல் திணறி வரும் விராட் கோலி 2008 – 2021 வரை 3 முறை மட்டுமே கோல்டன் டக் அவுட்டாக இருந்தார். ஆனால் 2022இல் 3 போட்டிகளில் கோல்டன் டக் அவுட்டாகி உள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரு சீசனில் அதிகமுறை கோல்டன் டக் அவுட்டான டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் என்ற பரிதாபத்தையும் ரோகித் சர்மா போன்றவர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்தப் பட்டியல் இதோ:
1. சுரேஷ் ரெய்னா : 2013
2. ரோஹித் சர்மா : 2018
3. நிதிஷ் ராணா : 2020
4. விராட் கோலி : 2022*

2016 போன்ற காலகட்டத்தில் பவுலர்களை புரட்டியெடுத்து பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட்டு ரன் மெஷினாக எதிரணிகளை மிரட்டிய விராட் கோலியை பார்த்து பழகிய நிறைய ரசிகர்கள் இப்படி தொடர்ச்சியாக கோல்டன் டக் அவுட்டாகி சொதப்புவதை பார்க்க முடியவில்லை என்று சமூக வலைதளங்களில் தங்களது வேதனையை வெளிப்படுத்துகின்றனர். இப்படி அவுட்டாவதற்கு பேசாமல் ரவி சாஸ்திரி சொன்னது போல் 2 – 3 மாதங்கள் ஓய்வு எடுத்துவிட்டு புத்துணர்ச்சியுடன் பார்முக்கு திரும்பும் வழியை பார்க்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். இதற்கிடையில் ஒருசில ரசிகர்கள் விராட் கோலி முடிந்து போனவர் பேசாமல் ரிட்டையராகி விடலாம் என்றும் வகை வகையாகக் கலாய்க்கின்றனர்.

பெங்களூரு 192:
இப்போட்டியில் முதல் பந்திலேயே விராட் கோலி அவுட்டானாலும் அடுத்து களமிறங்கிய இளம் வீரர் ரஜத் படிடார் உடன் கைகோர்த்த கேப்டன் டு பிளேஸிஸ் அதிரடியாக 2-வது விக்கெட்டுக்கு 105 ரன்கள் அமைத்து சரிந்த தனது அணியை மீட்டெடுத்தார்.

இதில் ரஜத் படிடார் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 48 (38) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த கிளன் மேக்ஸ்வெல் தனது பங்கிற்கு 3 பவுண்டரி 2 சிக்சருடன் 33 (24) ரன்கள் எடுத்து அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக நின்ற டு பிளசிஸ் 8 பவுண்டரி 2 சிக்சருடன் 73* (50) ரன்கள் எடுக்க கடைசி நேரத்தில் 1 பவுண்டரி 4 சிக்சர்களுடன் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 30* (8) ரன்கள் எடுத்து மிரட்டல் பினிஷிங் கொடுத்தார். அதனால் தப்பிய பெங்களூரு 20 ஓவர்களில் 192/3 ரன்கள் சேர்த்தது.

Advertisement