இவரோட பவுலிங்ல ரோஹித் சர்மா கண்டிப்பா திணறுவார் – சவால் விட்ட நியூசி பயிற்சியாளர்

Hesson
- Advertisement -

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நியூஸிலாந்து சென்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி நாளை ஆக்லாந்தில் நடைபெற உள்ளது.

Rohith-1

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடர் குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ள நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளரான மைக் ஹெசன் கூறியதாவது : ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய பந்தில் சிறிய அளவு ஸ்விங் இருக்கும். நியூசிலாந்தில் உள்ள சூழ்நிலையின் காரணமாக இந்த ஸ்விங் அதிகமாக இருக்கும்.

புதிய பந்தில் எப்பொழுதும் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ட்ரெண்ட் போல்ட் நியூசிலாந்து மைதானங்களில் சிறப்பாக பந்து வீசுவார். வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் இதுபோன்ற மைதானங்களில் அவர் ஸ்விங் செய்வதில் வல்லவர். அதே வேளையில் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா ஸ்விங் பந்தை சிறப்பாக எதிர் கொண்டது கிடையாது.

boult1

எனவே நிச்சயம் இந்த தொடரில் ரோஹித் போல்ட்டின் பந்துவீச்சில் திணறுவார். இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே நியூசிலாந்து மைதானங்கள் விளையாடுவதற்கு மிக கடினமாக இருக்கும் என்றும் சச்சின் டெண்டுல்கர் பேட்டி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement