இந்திய அணியில் தற்போது இருக்கும் இந்த பலம் அனைத்தையும் சாதிக்க வைக்கும் – நியூசி பயிற்சியாளர் பேட்டி

Bumrah-2
- Advertisement -

இந்திய அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மிக நீண்ட தொடரில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் சமீபத்தில் முடிவடைந்தது. இந்த தொடரில் 5 போட்டிகளிலும் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று சாதனை படைத்தது . இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது இந்திய அணியின் பந்துவீச்சு தான்.

Thakur 3

- Advertisement -

ஆம் இதற்கு முன்னர் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் இந்திய அணியின் பந்துவீச்சு சற்று சுமாரானதாகவே இருந்து வந்தது. தற்போது இருக்கும் இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் அபாரமாகதாகவும் எல்லா இடத்திலும் பந்துவீச ஏற்று கூடியதாகவும் இருக்கிறது. இதனால் தான் இந்த டி20 போட்டியின் வெற்றியும் நம் கைக்குள் வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இது குறித்து முன்னாள் நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசன் கூறியதாவது : இந்திய அணியின் பந்துவீச்சில் தற்போது எந்த காலத்திலும் இல்லாத வகையில் அபாரமாக இருக்கிறது. உலகின் எந்த ஒரு இடத்திலும் எந்த ஒரு இடத்தின் சூழ்நிலைக்கேற்றவாறு பந்துவீசும் வகையில் அந்த அணியின் பந்துவீச்சு அமைந்துள்ளது.

வேகப்பந்து வீச்சாளர்களும் சுழற்பந்து வீச்சாளர்களும் அனைத்து நாட்டிலும் பந்துவீசும் வகையில் தங்களை தகவமைத்துக் கொண்டு உள்ளனர். இதற்கு முன்னதாக இப்படி இந்திய அணியின் பந்துவீச்சு இருந்ததில்லை. இந்த பந்துவீச்சுதான் இந்திய அணிக்கு பல்வேறு நாட்டிலும் வெற்றியைத் தேடித் தந்து கொண்டிருக்கிறது என்று கூறினார் மைக் ஹெசன் என்பது குறிப்பிடத்தக்கது.

Thakur 1

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2 ஆவது போட்டி நாளை மறுதினம் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement