- Advertisement -
இந்திய கிரிக்கெட்

30 – 60 ஓவர்ஸ்.. எல்லாத்தையும் பாத்துட்டாரு.. இந்தியாவுக்காக விராட் கோலி ஆஸியில் இதை செய்வாரு.. மைக் ஹெசன்

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அக்டோபர் 16ஆம் தேதி துவங்கியது. அந்த தொடரிலாவது நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி பெரிய ரன்கள் குவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. ஏனெனில் 2021 ஜனவரி மாதம் வில்லியம்சன், ஸ்மித், ரூட் ஆகியோரை விட அவர் அதிக ரன்கள் மற்றும் சதங்கள் அடித்திருந்தார்.

அதன் பின் பெரிய ரன்கள் குவிக்காத அவர் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்த மூவரை விட பின்தங்கியுள்ளார். இந்நிலையில் விராட் கோலி தமது கேரியரில் பெரும்பாலான சாதனைகளையும் பெரிய ரன்களையும் பார்த்து விட்டதாக நியூசிலாந்தை சேர்ந்த முன்னாள் வீரர் மைக் ஹெசன் தெரிவித்துள்ளார். அதனால் இப்போதெல்லாம் சொந்த ரன்களை பார்க்காமல் அணியின் வெற்றிக்காகவே விராட் கோலி விளையாடுவதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் அசத்துவார்:

அதே சமயம் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மெகா டெஸ்ட் தொடரில் விராட் கோலி அசத்துவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி ஜியோ சினிமா சேனலில் மைக் ஹெசன் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி தன்னுடைய கேரியரில் இந்தியாவுக்காக போட்டிகளை வென்று கொடுத்தால் மட்டும் போதும் என்ற நிலையில் இருக்கிறார் என்று நினைக்கிறேன்”

“இது எதிரணிகளுக்கு ஆபத்தான அறிகுறி என்றும் நினைக்கிறேன். ஏனெனில் அவர் தனது சொந்த ரன்களில் கவனம் செலுத்தாத போது பெரிய ஸ்கோர் இயற்கையாகவே வரும். ஆஸ்திரேலியாவில் எதிர்தாக்குதல் மற்றும் அதற்கான சரியான தருணங்களை அறிந்து கொள்வது முக்கியம். குறிப்பாக 30 முதல் 60 ஓவர்கள் வரை முக்கியமான நேரங்கள். அந்த நேரத்தில் விராட் கோலி பேட்டிங் செய்தால் இந்திய அணியை சரிய விடமாட்டார்”

- Advertisement -

விராட் கோலி மீது நம்பிக்கை:

“அது இடைவெளியை கண்டு அடிப்பது சிங்கிள், டபுள் ரன்களை எடுப்பது பற்றியதாகும். அதற்காக ஆஸ்திரேலியா தாக்க முயற்சித்தால் விராட் கோலி பதில் தாக்குதல் செய்வார். வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பெரிய ரன்கள் குவிக்கா விட்டாலும் விராட் கோலி நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நியூசிலாந்துக்கு எதிராக விளையாடி விட்டு அவர் ஆஸ்திரேலியாவுக்கு செல்வது நல்லது”

இதையும் படிங்க: மொத்த அணியையும் செட் பண்ணிட்டாரு.. ரோஹித் இதை செய்யலனாலும் இந்தியா வெல்லும்.. அனில் கும்ப்ளே 

“ஆஸ்திரேலிய சூழ்நிலைகளை நன்றாக தெரிந்து வைத்துள்ள விராட் கோலியிடம் அங்கு அசத்துவதற்கான ஆட்டம் இருக்கிறது. அத்துடன் இளம் வீரர்கள் ஆஸ்திரேலியாவில் அசத்துவதற்கான ஆலோசனைகளையும் அவர் வழங்குவார்” என்று கூறினார். அவர் கூறுவது போல விராட் கோலி எப்போதுமே ஆஸ்திரேலியாவில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -