இந்திய கிரிக்கெட் அணி சமீபத்திய வங்கதேச டெஸ்ட் தொடரில் 2 – 0 (2) என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சொந்த சாதனையை பற்றி கவலைப்படாமல் எதிரணியை அடித்து நொறுக்க வேண்டும் என்ற அணுகுமுறையை பின்பற்றுகிறார்.
2023 உலகக் கோப்பையில் அந்த அணுகுமுறையை பின்பற்றிய அவர் பெரும்பாலான போட்டிகளில் சுயநலமின்றி அதிரடியாக விளையாடினார். அதனால் சொந்த சாதனையைப் பற்றி கவலைப்படாமல் அவுட்டான அவர் இந்தியாவுக்கு நல்ல துவக்கத்தைக் கொடுத்தை அடுத்து வரும் பேட்ஸ்மேன்களின் வேலையை எளிதாக்கினார். அந்த அணுகுமுறையை பின்பற்றி 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கும் ரோஹித் சர்மா முக்கிய பங்காற்றினர்.
ரோஹித் பேட்டிங்:
அதே போல வங்கதேசத்துக்கு எதிராக கான்பூர் டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடிய அவர் இந்தியாவின் வெற்றிக்கு அடித்தளத்தை அமைத்தார். ஆனால் இப்படி அதிரடியாக விளையாடுவதன் காரணமாக ரோஹித் சர்மா பெரும்பாலான போட்டிகளில் பெரிய ரன்கள் குவிப்பதில்லை என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைகிறது. இந்நிலையில் தலைமையில் அனைத்து வீரர்களும் வெற்றியில் பங்காற்றும் அளவுக்கு ரோஹித் சர்மா அணியை அமைத்துள்ளதாக அனில் கும்ப்ளே பாராட்டியுள்ளார்.
அதனால் அனைத்து போட்டிகளிலும் ரோஹித் சர்மா பெரிய ரன்கள் குவிக்கவில்லை என்றாலும் மற்ற வீரர்கள் இந்தியாவை வெற்றி பெற வைத்து விடுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி அனில் கும்ப்ளே பேசியது பின்வருமாறு. “டெஸ்ட் போட்டியில் தம்மிடம் உள்ள வீரர்களை நன்றாக பயன்படுத்துவதில் ரோகித் சர்மா புத்திசாலித்தனமானவர். 2 உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர்கள் மற்றும் பும்ராவை கொண்டிருப்பதற்கு ரோகித் ஆசீர்வதிக்கப்பட்டிருக்க வேண்டும்”
செட்டான இந்திய அணி:
“முதல் அல்லது 80வது ஓவர் உட்பட போட்டியின் எந்த நேரத்தில் பந்தை கொடுத்தாலும் பும்ரா வித்தியாசத்தை ஏற்படுத்துவார். ஜெய்ஸ்வால் போன்ற இளம் பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா தலைமையில் அவருடைய அதிரடி அணுகுமுறையை பின்பற்றி விளையாடுகிறார். சுப்மன் கில் 2வது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு சென்று கச்சிதமாக விளையாடுகிறார்”
இதையும் படிங்க: தோனியை சி.எஸ்.கே அணி இப்படித்தான் தேர்வு செய்ய வேண்டும்.. ரிடென்ஷன் முடிவு பற்றி – அஷ்வின் பேச்சு
“கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், விராட் கோலி ஆகியோரும் ரோஹித் தலைமையில் நன்றாக விளையாடுகின்றனர். கடந்த இங்கிலாந்து தொடரில் பண்ட், கோலி ஆகியோர் இல்லாத போது 1 – 0 என்ற கணக்கில் இந்தியா பின்தங்கியிருந்த நிலையில் துருவ் ஜுரேல் போன்ற இளம் வீரர்கள் வெற்றியில் பங்காற்றினர். எனவே ரோகித் பெரிய ரன்கள் அடிக்க வேண்டும் என்பதில்லை. அவர் பெரிய ரன்களும் அடிக்கவில்லை. ஆனால் தனக்கான வேலையைச் செய்ய தம்முடைய வீரர்களுக்கு அவர் உத்வேகத்தை கொடுத்துள்ளார்” என்று கூறினார்.



