சொன்னா கேட்டா தானே.. இந்தியாவை தோற்கடிக்க அதுல மட்டும் கவனம் செலுத்துங்க.. பாகிஸ்தானுக்கு ஹெசன் அறிவுரை

Mike Hesson
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன. வரும் ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறும் அப்போட்டியில் எப்படியாவது இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற வெறியுடன் பாகிஸ்தான் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஏனெனில் இத்தொடரில் விளையாடிய 2 போட்டிகளிலும் பாகிஸ்தானை எளிதாக இந்தியா தோற்கடித்தது.

அத்துடன் கடைசியாக விளையாடிய 7 போட்டிகளிலும் பாகிஸ்தானை 7 முறை தோற்கடித்து இந்தியா அசத்தியுள்ளது. இதற்கிடையே காஷ்மீரில் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நிகழ்த்திய தாக்குதலில் 26 இந்தியர்கள் இயற்கை எய்தினார்கள். அதற்கு பதிலடியாக லீக் சுற்று போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு இந்திய அணி கைகொடுக்கவில்லை.

- Advertisement -

சொன்னா கேட்டா தானே:

அதற்காக சூப்பர் 4 போட்டியில் அரை சதத்தை அடித்த பாகிஸ்தான் வீரர் ஃபர்ஹான் துப்பாக்கியால் சுடுவது போல் பேட்டை வைத்து இந்தியாவை கிண்டலடித்தார். 6 இந்திய விமானங்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீசியது என்ற போலியான கருத்தை வைத்து ஹரிஷ் ரவூப் செய்கையால் இந்தியாவை கிண்டலடித்தார். அதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் உண்மையில் கிரிக்கெட்டில் அரசியலைக் கொண்டு வருவது யார்? என்று பாகிஸ்தான் வீரர்களை கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில் அப்படியெல்லாம் செய்யாமல் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துமாறு தங்கள் வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன் தெரிவித்துள்ளார். ஆனால் சொன்னால் கேட்டால் தானே என்ற வகையில் பாகிஸ்தான் வீரர்கள் அதை கேட்கவில்லை என்று அவர் மறைமுகமாக கூறியுள்ளார். அதே சமயம் ஃபைனலில் இந்தியாவை தோற்கடிக்க சிறப்பாக விளையாட வேண்டும் என்று பாகிஸ்தானை அறிவுறுத்தும் ஹெசன் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

நம்பர் ஒன் இந்தியா:

“கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்துங்கள் என்பதே என்னுடைய மெசேஜாகும். அதையே நாங்கள் செய்கிறோம். ஆனால் அந்த விஷயங்கள் (சைகைகள்) எங்களை விட உங்களுக்குத் தான் அதிகம் தெரியும். நான் கிரிக்கெட்டின் பக்கத்தை மட்டுமே நிர்வகிக்கிறேன். அழுத்தமான போட்டிகளில் நாட்டின் மீதான ஆர்வத்தால் அவர்கள் அப்படி சைகை செய்கிறார்கள் அல்லவா? ஆனால் நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பதே என்னுடைய வேலையின் அங்கமாகும்”

“இந்தியாவை நீண்ட நேரம் அழுத்தத்திற்குள் வைக்க நாங்கள் போதுமான அளவுக்கு நன்றாக விளையாட வேண்டும். ஏனெனில் இந்தியா நம்பர் ஒன் அணியாக இருப்பதில் காரணம் இருக்கிறது. லீக் சுற்றை விட சூப்பர் 4 சுற்றில் நாங்கள் இந்தியாவுக்கு எதிராக நன்றாக விளையாடினோம்”

இதையும் படிங்க: வெ.இ தொடரில் பும்ராவை ட்ராப் பண்ணிட்டு அவங்களுக்கு சான்ஸ் கொடுத்திருக்கலாம்.. பதான் வித்யாச கருத்து

“முதல் போட்டியை நாங்கள் இந்தியாவை கட்டுப்படுத்த விட்டு விட்டோம். கடந்தப் போட்டியில் அசத்திய போது அபிஷேக் சர்மா வெற்றியை பறித்து விட்டார். ஃபைனல் வாய்ப்புக்கு நாங்கள் தகுதியானவர்கள். அதை பயன்படுத்துவது எங்கள் கையிலேயே இருக்கிறது. எனவே நாங்கள் கோப்பையை வெல்லும் நிலையில் இருக்க முயற்சிப்போம்” என்று கூறினார்.

Advertisement